அரசியல் பழிவாங்கல், ஈஸ்டர் தாக்குதல் ; ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளை சபைப்படுத்துங்கள்  - எதிர்கட்சிகள் கோரிக்கை

Published By: T Yuwaraj

09 Feb, 2021 | 05:46 AM
image

(ஆர்.யசி)

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையையும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கக்கோரி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதான எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளதுடன் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீது இரண்டு நாட்கள் விவாதமும் கேட்டுள்ளனர். 

Image result for ஜனாதிபதி ஆணைக்குழு virakesari

எனினும் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என சந்திப்பில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை கூடவுள்ள நிலையில், பாராளுமன்ற விவாதங்களை தீர்மானிக்க  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டம் நேற்றுக் காலை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது. 

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதானது,தொழில் அமைச்சினால் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

 நாளை  10ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணி முதல் 10.30 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பிரதமர் பதில் வழங்குவார்.

அதன் பின்னர் முற்பகல் 10.30 மணி முதல் முற்பகல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல விடைக்கான கேள்விநேரம் வழங்கப்படும். 

அன்றையதினம் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதுடன், இவ்விவாதம் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை இடம்பெறும்.

அதன் பின்னர் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரரணை மீதான விவாதம் இடம்பெறும்.

பெப்ரவரி 11 ஆம் திகதி வியாழக்கிழமை ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பததுடன் , அன்றையதினம் முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல விடைக்கான கேள்விக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அத்துடன், பெப்ரவரி 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சுரங்கனி எல்லாவல, கௌரவ கே.பி.சில்வா மற்றும் கௌரவ கபில அபேரத்ன ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும். அன்றையதினம் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறும், ஆணைக்குழுவின் அறிக்கை மீது இரண்டு நாட்கள் விவாதம் நடத்த சபை இணங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 

அதேபோல் ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையையும் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனினும் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையையும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையையும் சபைப்படுத்துவது குறித்து ஆளும் கட்சி எந்தவித தெளிவான பதிலையும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கவில்லை. 

அதேபோல் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தை நடத்துவதற்கும் அரசாங்கம் இணங்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18