வாகன மோசடிக்கு உதவ போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் 26 வயதான சந்தேக நபர் ஒருவர்  கடுவெலயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவருகையில்,

சந்தேக நபர் வாகன திருட்டுகளில் ஈடுபட்ட கும்பல்களுக்கு அசல் உரிமத் தகடுகளைப் பெறுவதற்காக போலி ஆவணங்களைத் தயாரித்து வழங்கியுள்ளார்.

அவற்றை வாகனங்கள் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் திருடப்பட்ட வாகனங்களுக்கான அசல் உரிமத் தகடுகளைப் பெறுவதற்காக போலி ஆவணங்களை அதிகாரிகளிடம் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

உரிமத் தகடுகளைப் பெற்ற பிறகு, குறித்த கொள்ளை கும்பல் திருடப்பட்ட வாகனங்களுக்கு உரிமத் தகடுகளை சரிசெய்து, பின்னர் சந்தேகத்திற்கு இடமின்றி வாங்குபவர்களுக்கு வாகனங்களை மறுவிற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது, 

இதையடுத்து கடுவெலையைச் சேர்ந்த சந்தேகநபர் மேற்கு மாகாண தென் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரிடமிருந்து  அதிகாரிகள் 40 போலி ஆவணங்களை கைப்பற்றியதுடன் குறித்த  சந்தேக நபரை கொழும்பு நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், 

இந்நிலையில்  வாகன மோசடி குறித்து மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.