விமல் வீரவன்ச பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் - பொதுஜன பெரமுன

Published By: Digital Desk 4

08 Feb, 2021 | 08:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கிடையாது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிட்ட கருத்துக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

Image result for சாகர காரியவசம் virakesari

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுன கொள்கை அடிப்படையில்உருவாக்கப்பட்ட கட்சி இதன் காரணமாகவே குறுகிய காலத்தில் நாட்டுமக்களின்பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ளது.

குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பொதுஜன பெரமுன செயற்படவில்லை. ஒழுக்கத்தின் அடிப்படையில் கட்சி முன்னேற்றமடைந்துள்ளது.

2015ஆம் ஆண்டுக்கு பிறகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியதிகாரம் தோற்றம் பெற வெண்டும் என பெரும்பான்மையின மக்கள் எதிர்பார்த்தார்கள் அனைவரின் எதிர்பார்ப்புக்கு மத்தியிர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோற்றம் பெற்றது.

கட்சியின் தலைமைத்துவத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும் என்று அரசியல் மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவில்லை. நாட்டு மக்களே அத்தீர்மானத்தை எடுத்தார்கள்.

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலும், பொது தேர்தலிலும் பொதுஜன பெரமுன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவமாக கொண்டு மக்களாணையை பெற்றுக் கொண்டது.

யுத்தத்தை வெற்றிக் கொண்ட தலைவர் என்ற  கோணத்திலேயே நாட்டு மக்கள் அவரை பார்க்கிறார்கள். ஆகவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கொண்டே 2019ஆம்ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து பெற்று அதனை  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும்என அமைச்சர் விமல் வீரவச்ன குறிப்பிட்டுள்ள கருத்து பாரதூரமானது.

கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் இவ்வாறான முரண்பாடான கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் கருத்துரைக்கும் அதிகாரம் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கிடையாது.

பொதுஜன பெரமுனவில் கூட்டணியமைத்துள்ள கட்சி என்ற காரணத்தினால் தலைமைத்துவம் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை இவருக்கு எவரும் வழங்கவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமே இருக்கும் அதில் எவ்வித மாற்றமும் கிடையாது.

அரசியல் நோக்கங்களுக்காக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ள அடிமட்ட கருத்து கவலைக்குரியது.ஆகவே இவ்விடயம் குறித்து அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09