(எம்.ஆர்.எம்.வசீம்)
கொரோனா தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை குறைப்பதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது என தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
அதன் பிரகாரம் இதுவரை காலமும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிலையினை 10 நாட்களுக்கு குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிக்கின்றது.
இவ்வாறு 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படுவது, நோய் அறிகுறிகள் வெளிக்காட்டாத வைரஸ் தொற்றுக்குள்ளாகுபவர்களின் தனிமைப்படுத்தல் காலமாகும்.
அத்துடன் குறித்த 10 நாட்கள் கணிக்கப்படுவது, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படும் நபரிடமிருந்து பி.சி.ஆர். மாதிரி பெற்றுக்கொள்ளப்பட்ட தினத்தில் இருந்தாகும்.
மேலும் வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நபரிடமிருந்து வைரஸ் பரவும் சாத்தியம் இருப்பது ஆரம்ப 10 நாட்களாகும். அதன் பின்னர் தொற்றாளரிடமிருந்து வேறு நபர்களுக்கு பரவுவதில்லை என்பது விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஆரம்ப 10 நாட்கள் மாத்திரம் அவர்கள் சிகிச்சை மத்திய நிலையங்களில் தங்கியிருப்பதற்கும் எஞ்சிய 4 நாட்கள் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM