பிரேஸிலின் வடகிழக்கில் அமைந்துள்ள ரியோ கிராண்டே டோ நோர்டே மாநிலத்தின் தலைநகரமான நடாலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடி விபத்தில் 4 பெர் உயிரிழந்துள்ளதோடு, இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடி விபத்தில் ஏழு வீடுகள் இடிந்து விழுந்ததாக அந்நாட்டு இராணுவ பொலிஸ் தெரிவித்துள்ளது.
நடாலின் கிழக்குப் பகுதியில் உள்ள மே லூயிசா பகுதியில் அந்நாட்டு நேரப்படி 03:00 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 49 வயதான பெண், அவரது 18 வயதான மகள், மேலும் 57 வயதுடைய இரண்டு பெண்கள் அடங்குவர்.
மேலும் இருவர் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வெடி விபத்து தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM