அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையுடன் (UNHRC) மீண்டும் இணைவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந் நாட்டு வெளியுறவுத் துறையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனும் ஜெனீவாவில் உள்ள ஒரு மூத்த அமெரிக்க இராஜதந்திரியும் இதற்கான அறிவிப்பினை திங்கள்கிழமை வெளியிடுவார்கள். 

2021 ஆம் ஆண்டின் இறுதி வரை, அமெரிக்காவால் வாக்களிக்காத பார்வையாளர் அந்தஸ்தை மட்டுமே தற்சமயம் வைத்திருக்க முடியும் என்ற நிலையில், பைடன் நிர்வாகத்தின் இத் தீர்மானம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வொஷிங்டன் முழு உறுப்பினர் இடத்தைப் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பல சர்வதேச அமைப்புகள் மற்றும் ஒப்பந்தங்களிலிருந்து விலகுவதற்கான தனது முடிவுகளுக்கு பங்களித்த குடியரசுக் கட்சியின் ட்ரம்ப், 2018 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகினார்.

இஸ்­ரே­லுக்கு எதி­ராக பக்க சார்­பாக செயற்­ப­டு­வ­தாகக் குற்­றம்­சாட்டி ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வை­யி­லி­ருந்து அமெரிக்கா இந்த முடிவினை எடுத்திருந்தது.

47 உறுப்பினர்களைக் கொண்ட ஜெனீவாவை தளமாகக் கொண்ட சபையின் அடுத்த அமர்வு இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.