கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த கோடையில் டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதை பெரும்பான்மையான ஜப்பானியர்கள் எதிர்ப்பதாக யோமியூரி செய்தித்தாள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

யோமியூரி கருத்துக் கணிப்பு 61 சதவீதமானோர் ஒருங்கிணைந்த விளையாட்டுக்கள் ஒத்திவைக்கப்பட வேண்டும் அல்லது இரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதேநேரம் இந்த கோடையில் டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்துவதற்கு 36 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களில் 28 சதவீதமானோர் பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், மீதமள்ள 8 சதவீதமானோர் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் தற்சமயம் வரை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 404,128 ஆக காணப்படுவதுடன், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 6,373 ஆக பதிவாகியுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.