மேற்­கிந்­தியத் தீவுகள் அணிக்கு எதி­ரான முதல் டெஸ்டில் அவுஸ்­தி­ரே­லியா 212 ஓட்­டங்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்­றுள்­ளது.

அவுஸ்­தி­ரே­லிய - மேற்­கிந்­தியத் தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹோபர்ட் நகரில் நடை­பெற்­றது.

இந்தப் போட்­டியில் முதல் இன்­னிங்ஸில் அவுஸ்­தி­ரே­லியா 583 ஓட்­டங்கள் எடுத்து டிக்ளேர் செய்­தது.

அடுத்து விளை­யா­டிய மேற்­கிந்­தியத் தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்­புக்கு 207 ஓட்­டங்களும் எடுத்­தது.

ரோச் 31 ஓட்­டங்­களும், டேரன் பிராவோ 94 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் ஆட்­ட­மி­ழக்­காமல் இருந்­தனர்.

நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்­தது, ரோச் 31 ஓட்­டங்­களும், டேரன் பிராவோ 108 ஓட்­டங்­களும் எடுத்­தனர்.

அடுத்து வந்த ஜெரோமி டெய்லர் டக் அவுட்­டாக மேற்­கிந்­திய தீவுகள் அணி 223 ஓட்­டங்­க­ளுக்கு அனைத்து விக்­கெட்­டு­க்க­ளையும் இழந்­தது.

தொடர்ந்து பலோ ஒன் முறையில் இரண்­டா­வது இன்­னிங்ஸை தொடங்­கிய மேற்­கிந்­தியத் தீவுகள் அணி, அனைத்து விக்­கெட்­டு­க­ளையும் இழந்து 148 ஓட்­டங்கள் எடுத்­தது.

இத­னை­ய­டுத்து அவுஸ்திரேலியா 212 ஓட்டங்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.