இலங்கையைப் பொறுத்தவரை இன்று கவலைக்குரிய தினமாகும் - தினேஷ் குணவர்தன

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்குலக நாடுகளினால் முடியாமல் போயுள்ளது

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/102663

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியா ஒத்துழைப்பு வழங்காமை பாதிப்பாகாது - தயாசிறி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் தொடர்பான ஜெனீவா பிரேரணைக்கு இலங்கைக்கு ஆதரவாக இந்தியா ஒத்துழைப்பு வழங்காமை பாதிப்பாகாது.

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/102660

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நடுநிலை வகித்த இந்தியா ஜெனிவாவில் இலங்கைக்கு மீண்டும் வலியுறுத்தியது இது தான் !

இலங்கையின் ஒற்றுமை , பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு மற்றும் சமத்துவம், நீதி, அமைதி , கௌரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு உறுதியளித்தல் ஆகிய இரு பிராதன தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடுள்ளதாக ஜெனிவாவில் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/102656

------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றம்

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன.

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/102652

--------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் ஜெனிவாவில் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானம் அமைந்துள்ளதாக வாக்கெடுப்பின் போது பிரித்தானியா தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/102649

ஜெனிவாவில் இலங்கை குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று !

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் இன்றைய திங்கட்கிழமை அமர்வு இலங்கைக்கு முக்கியமானதொன்றாகியுள்ளது. 

அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/102538

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தவறுகள் திருத்தப்படாமல் சர்வதேச அரசியலில் வெற்றியே இல்லை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடர் முடிவுக்கு வரும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. 

பிரித்தானிய தலைமையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும்போது, பிரித்தானியா சார்பு நாடுகளுக்கு வெற்றி கிடைக்கலாம்.

மேலும் செய்திகளுக்கு  https://www.virakesari.lk/article/102142

------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவை கையாள்வதற்கு தமிழத்தரப்பிடம் உள்ள பிடிகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டுத்தொடர் முடிவு நிலையை அண்மித்துள்ளது. இலங்கை தொடர்பான பிரேரணை நாளை திங்கட்கிழமை வாக்கெடுப்பு விடப்படவுள்ளது. 

இதில் அமெரிக்க – மேற்குலக - இந்தியக் கூட்டுக்கு வெற்றி கிடைக்கலாம். இக்கூட்டத்தொடரை முன்வைத்து பலதரப்பட்டவர்களும் பல்வேறு பேரம்பேசலில் ஈடுபட்டாலும் மௌனமாகவும்

மேலும் செய்திகளுக்கு  https://www.virakesari.lk/article/102514

--------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவா தீர்மானம் ! எந்த நாடு, எந்தப் பக்கம் ?

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடக்கவுள்ள வாக்கெடுப்பில், தீர்மானம் தோற்கடிக்கப்படும் வாய்ப்பு இல்லை. இலங்கை அரசே அதனை நம்பவில்லை.ஆனால் எத்தனை நாடுகள் இதற்கு ஆதரவாக வாக்களிக்கப் போகின்றன என்ற கேள்வி உள்ளது”

“ஜெனிவாவில் 2012 இல் 24 நாடுகளும், 2013 இல் 25 நாடுகளும், 2014இல் 23 நாடுகளும் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தன. இந்தமுறை அந்தளவு வாக்குகள் கிடைக்குமா என்பது கேள்வியாகவுள்ளது”

“ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கை மீதான விவாதத்தில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் கருத்து வெளியிட்டிருந்த போதும், அவற்றில் 10 நாடுகள் தான் வாக்களிக்கக் கூடியவை. அந்த 10 நாடுகளில் எத்தனை இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்ற குழப்பம் இருக்கிறது”

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/102513

-------------------------------------------------------------------------------------------------------------------------------

சர்வதேச பொறிமுறைக்கு சென்றாலும் உடனடியாக தீர்வு கிடைக்காது

பாதிக்கப்பட்டோர் சர்வதேச பொறிமுறையை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செயற்படுவது கூட துரிதமாக இல்லை. இந்த பொறிமுறைகளுக்கு நாம் சென்றால் கூட உடனடியாக எமக்கு நீதி கிடைக்குமென்றில்லை அல்லது கட்டாயமாக நீதிகிடைக்கும் என்ற உத்தரவாதமுமில்லையென்றும் 

மேலும் செய்திகளுக்கு  https://www.virakesari.lk/article/102068

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மற்றொரு பொறிக்குள் சிக்கும் இலங்கை

“சீனா இலங்கையிடம் யுவான்களை கடனாக கொடுத்து, டொலர்களாகத் திருப்பி எடுத்துக் கொள்கிறது. இது சீனா தனது நாணயத்தை டொலர்களாக மாற்றிக் கொள்வதற்கு கையாளுகின்ற ஒரு தந்திரம்”

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101514

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் மீண்டும் சிக்கும் இலங்கை

“12 ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் வெற்றி கொள்ளப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது. 12 ஆண்டுகளுக்குப் பின்னரும், பிரபாகரனின் படங்களுக்குக்கூட அஞ்சுகின்ற நிலையில்தான் அரசாங்கம் இருக்கிறது”

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101488

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவா  நீர்த்துப்போன போர்க்களம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகள் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள், பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101450

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

சர்வதேச அரசியலிலும் தமிழ் தரப்புக்கு தோல்வியா ?

ஐ.நா. மனித உரிமைகள்பேரவையில் ஆறு நாடுகள் கூட்டாக 46ஃ1 என்ற பெயரில் புதிய பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளன. அந்தப்பிரேரணையை “புதிய மொந்தையில் பழையகள்” என்பதை விட “புதிய மொந்தையில் பல நாள் புளிச்சகள் எனலாம்” தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் எவையும் அதில் உள்ளடக்கப்படவில்லை. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களும் பிரேரணைக்கும் இடையில் 

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101416

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாவம் பாதிக்கப்பட்ட மக்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வு இம்முறை மெய்நிகர் வழியில் நடைபெற்று வருகின்றது. பெப்ரவரி 22இல் ஆரம்பித்து மார்ச் 19இல் நிறைவடைவதாக கூறப்பட்டாலும் தற்போது காலம் நீடிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் செய்திகளுக்கு  https://www.virakesari.lk/article/101372

----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவா ஏமாற்றமா?

“ஐ.நா. கட்டமைப்பின் ஊடாக நீதியைப் பெறுவது சாத்தியமில்லை என்றும், அவ்வாறு நீதி கிடைத்தால் அது எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டமாக இருக்கும்” -ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் சாள்ஸ் பெட்ரி

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101367

-------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையை ஆதரித்த 20 நாடுகளில் 10 நாடுகளுக்கே வாக்களிக்க முடியும்: இந்தியாவின் கருத்து உற்சாகமளிக்கிறது என்கிறார் சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இலங்கை தொடர்பான விவாதத்தில் இலங்கைக்கு சார்பாக 20 நாடுகள் உரையாற்றியிருந்தாலும் கூட 10 நாடுகளே வாக்களிக்கும் உரிமையை கொண்டிருக்கின்றன என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101259

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சர்வதேச நாடுகளிடம் தீர்வைப்பெற முயற்சித்தால் மேலும் பிரிவினையே உருவாகும் - அலி சப்ரி

ஜெனிவா கூட்டத்தொடரின் அறிக்கையானது இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகவே முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை வாழ் மக்களுக்கு நாட்டுக்குள் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் , அதற்கான தீர்வினை நாட்டில்தான்  பெற்றுக் கொள்ளமுடியும்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101219

----------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவாவில் இலங்கையை மிக வலுவாக ஆதரிப்போம் - சீனா அறிவிப்பு

சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள் மற்றும் ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாததாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ள சீனா , ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் இலங்கையை வலுவாக ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளது.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101230

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ. நா.வுக்கு பதிலளிக்க முதல் நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் - சந்திரசேகர்

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு பதில் அளிக்க வேண்டும் என்றால் முதலில் நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101233

இனவாதத்திற்காகவே தேசிய கீத விடயம் கையளாப்படுகின்றது : ஜே.வி.பி  குற்றச்சாட்டு – DanTV

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரம் - கரு ஜயசூரிய

வெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இது இலங்கைக்கு மிகமுக்கியமான வாரமாகும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101236

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

முன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால்  ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள் 

துண்டுப்பிரசுரம் ஒன்றில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோத்தாபயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101249

--------------------------------------------------------------------------------------------------------------------------------

மனித உரிமை பேரவையுடன் அரசாங்கம் புத்திசாதூரியமாக செயற்படவேண்டும் - கரு ஆலோசனை

நாடு பாரிய பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் ஜெனீவா மனித உரிமை பேரவையுடன் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ளாதவகையில் அரசாங்கம் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். 

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101195

---------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு பங்களிப்பு செய்யும் : ஜெனிவாவில் இந்தியா

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மத்திப்பீட்டு அறிக்கை மிகவும் கவலையளிக்கிறது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்தார்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101189

-------------------------------------------------------------------------------------------------------------------------------

பச்லெட்டின் அறிக்கையினை  இலங்கை முற்றாக நிராகரிக்கிறது - தினேஷ் குணவர்தன

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் விடுத்த அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது.  இவ்வாறானதொரு அறிக்கையை வெளியிடுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை.  இதனூடாக ஐ.நா. மனித உரிமை  சாசனம் மீறப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101187

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை அரசாங்கம் கதவை மூடிவிட்டது; பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச மாற்று வழியை உறுப்பு நாடுகள் தேடவேண்டும் - பச்லெட் அறிவிப்பு

இலங்கையில்  கடந்த காலங்களில்  இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதில் இலங்கை  தோல்வி அடைந்துள்ளதன்  ஊடாகவும் ஜெனீவா பிரேரணையில் இருந்து விலகியதன் மூலமும் இலங்கை அரசாங்கம் நேர்மையான முறையில் உள்ளக ரீதியில்  முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான கதவை மூடிவிட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் நேற்று  ஜெனிவாவில் தெரிவித்தார்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101186

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையில் பொறுப்புக்கூறல் இல்லை ; எனவே கொண்டுவரப்படும் பிரேரணையை ஆதரியுங்கள் - அமெரிக்கா

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்பாடு சரியான முறையில் இடம்பெறவில்லை. பொறுப்புக்கூறலில்  முன்னேற்றம் இல்லை. எனவே   இலங்கை குறித்து கொண்டுவரப்படும்  பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆதரவு வழங்க  வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. 

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101185

--------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையின் பொறுப்பு கூறலின்மையை முன்னிறுத்தி அமெரிக்கா தீர்மானத்திற்கு  ஒத்துழைக்கும் - அமெரிக்க இராஜாங்க செயலர்

இலங்கையில் கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி இம்முறை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன்  தெரிவித்தார்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101170

-------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்கள் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதாக உள்ளது – திஸ்ஸ அத்தநாயக்க

இலங்கை என்பது சுயாதீனமானதும் இறைமையுடைதுமான நாடாகும். ஆகவே நாட்டின் அனைத்து உள்ளக விவகாரங்களிலும் தலையிடும் உரிமை சர்வதேச அமைப்புக்களுக்கோ அல்லது சர்வதேச நாடுகளுக்கோ இல்லை.

ஆனால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட சில கருத்துக்கள் நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலேயே அமைந்துள்ளன.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101177

----------------------------------------------------------------------------------------------------------------------------------

''இலங்கையிடம் ஆக்கபூர்வமான பொறுப்புக்கூறலை எதிர்பார்க்க இயலாது''

இறுதிப்போரில் இடம்பெற்றதாக கூறப்பட்ட போர் குற்றங்களுக்கும் பாரதூரமான மீறல்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்கவோ அல்லது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலோ இலங்கைக்கு எவ்வித தேவையும் காணப்பட வில்லை என்பது தெளிவாகியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலதிக செய்திகள் https://www.virakesari.lk/article/101135

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

எமது பிள்ளைகள் அழிக்க முடியாத சாட்சிகளாகியுள்ளனர். அவர்களிற்கு நீதி கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும். அந்தவகையில் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை நாம் எதிர்ப்பார்த்து நிற்கிறோம் என்றனர்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101111

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

“பிரபாகரனை நான் கொன்றேன் என்று  ஜனாதிபதி கோத்தாபய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம்”

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த பிரேரணை பற்றி கூட்டமைப்பு அமெரிக்க தூதுவரிடம் கூறியதென்ன?

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101107

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையின் பொறுப்பு கூறலின்மையை முன்னிறுத்திய தீர்மானத்திற்கு அமெரிக்கா ஒத்துழைக்கும்: இராஜாங்க செயலர்

இலங்கையில் கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி இம்முறை கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் தெரிவித்தார். 

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101128

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டியது அவசியம்: ஜெனிவாவில் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகும் என  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101125

 --------------------------------------------------------------------------------------------------------------------------------

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க செயலாளரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை

கடந்த 17 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என்னை விசாரணைக்காக கொழும்பு வருமாறு எனது மகளின் வீட்டில் அறிவித்தல் ஒன்றை வழங்கியிருந்தார்கள். எனது வயதும் மற்றும் சுகவீனம் தொடர்பில் நான் அவர்களிற்கு தொலைபேசி ஊடாக கூறியிருந்தேன்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101118

------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவாவில் இலங்கை குறித்து இன்று விவாதம்; பச்லெட் அறிக்கையை வெளியிடுவார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர்  திங்கட்கிழமை ஜெனிவாவில்   ஆரம்பமாகி ஆரம்ப அமர்வுகள் நடைபெற்றுவருகின்ற நிலையில்  இன்று    இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. 

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101109

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்போம் - அமெரிக்கத் தூதுவர்

என்றோ ஓர் நாள் தன் மகனையோ, கணவனையோ, அண்ணனையோ, தம்பியையோ பார்த்த நினைவையும் அவர்களின் நிலைமை என்னவென்று அறிவதற்காகவே பல படிகள் ஏறியிறங்கிய புகைப்படங்களையும் மட்டுமே ஆதாரமாக கொண்டு இன்னும் கண்ணீரோடு காத்திருக்கின்றனர் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101057

------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சந்தேகம் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு

ஐ.நா மனிதவுரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னராக ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சந்தேகம் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101065

-----------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு உறுப்புநாடுகள் அனுமதிக்கக்கூடாது : ஜெனிவாவில் இலங்கை வலியுறுத்தல்

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை எதிர்த்து அனைத்து நாடுகளும் வாக்களிக்க வேண்டுமென இலங்கை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101076

--------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கும் ஜெனிவா முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது - பொதுஜன பெரமுன

இலங்கையை ஜெனிவாவில் நெருக்கடிக்குள்ளாக்க புலம்பெயர் அமைப்புக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் முன்னெடுக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன தெனுபிடிய தெரிவித்தார்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101079

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

விமர்சகர்களை சிறைப்படுத்துவதன் மூலம் தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியாது ; மிச்சல் பச்லெட்

விமர்சகர்களை சிறைகளுக்கு அனுப்புவதன் ஊடாக தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியாது.  மக்கள் மீதான செல்லுபடியற்ற சுதந்திர கட்டுப்பாடுகள் தேவையற்ற  மற்றும் மேலதிக  வகையில் படைகளை பயன்படுத்துதல் போன்றன இந்த வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு உதவியாக அமையாது. 

மேலதிக செய்திகளுக்கு  https://www.virakesari.lk/article/101054

---------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை குறித்த பிரேரணையை பிரித்தானியா தாக்கல் செய்யும் - டொமினிக் ராப்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இம்முறை கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை அவதானிக்கும் வகையிலான ஒரு பிரேரணையை பிரித்தானியா சமர்ப்பிக்கும் என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் நேற்று ஜெனிவாவில் பேரவையில்  அறிவித்தார்

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101036

-------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று இரவு இணையவழியில் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனிவாவில் உரை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகிய நிலையில் இன்று இரவு 8.30 மணிக்கு இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையாற்றவுள்ளார்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101039

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இராஜதந்திர போர் - 47 நாடுகளிடம் ஆதரவுக் கரம் நீட்டும் இலங்கை

இவ்வாறு சவால்மிக்கதொரு சூழலை ஜெனிவாவில் இலங்கை எதிர்கொண்டுள்ளது. ஆனால் மனித உரிமைகள் ஆiணாயளரின் அறிக்கையை முழுமையாக நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை, புதிய பிரேரனையை கொண்டு வரும் நாடுகளுக்கு எதிராக கடும் இராஜதந்திர போரையும் தொடுத்துள்ளது.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/101030

----------------------------------------------------------------------------------------------------------------------------------

மனித உரிமைகள் பேரவையை சாதாரணமாக நினைத்தால் யுத்தக் குற்ற நீதிமன்றத்தில் நிற்கவேண்டிய நிலை உருவாகும் - பிரதிபா மஹநாமஹேவா

மனித உரிமைகள் பேரவையால் இலங்கையை ஒன்றும் செய்துவிட முடியாதென கருதி அரசாங்கம் பலவீனமாக இருந்துவிடக்கூடாது, மனித உரிமைகள் பேரவையின் இந்த முயற்சி இலங்கையை யுத்த குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வைப்பது என்பதை மறந்துவிடாது அரசாங்கம் பிரேரணைக்கு எதிரான ஆதரவை திரட்ட வேண்டும்

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/100998

------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு எதிரான பிரேரணையை வெற்றிகொள்வதில் பிரித்தானியா உறுதி - பிரித்தானிய உயர் ஸ்தானிகர் 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா கொண்டுவரும் பிரேரணையை வெற்றிகொள்வதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், இது குறித்து பேரவையின் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகவும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹுல்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார். 

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/100988

------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் செயற்படாது : பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணையனுசரனை வழங்க இணக்கம் தெரிவித்தால் மனித உரிமை  பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக 2015 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு ஆதரவாக செயற்படவில்லை.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/1009

-------------------------------------------------------------------------------------------------------------

உலகநாடுகளின் சில அரசாங்கங்கள் கொரோனாவை காரணம் காட்டி அடிப்படை சுதந்திரத்தை மறுக்கின்றன - ஐ.நா. செயலாளர் நாயகம்

 ஜனநாயகக்கொள்கைகள் புறக்கணிக்கப்படுதல், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், சிவில் சமூக இடைவெளி வரையறுக்கப்படுதல், சிவில் சமூக அமைப்புக்கள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மையின சமூகத்தவர் மீதான மீறல்கள் உள்ளடங்கலாக உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்கள்

மேலதிக செய்திகளுக்கு  https://www.virakesari.lk/article/100975

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவாவில் விழுமா சுருக்கு?  

போர்க்கால மீறல்கள் இப்போது இலங்கை படைகளின் கழுத்தை நெரிக்கத்தொடங்கியிருக்கின்றன.  ஆனாலும், பொறுப்புக்கூறலை நோக்கி இலங்கையை தள்ளிச் செல்லப் போதுமானநடவடிக்கையாக இது இருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/100882

------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை விவகாரத்தை பின்தள்ளுமா மியான்மர்  

இலங்கை விவகாரம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இம்முறைக் கூட்டத்தில் தீவிர கவனம் செலுத்தப்படும் ஒன்றாக மாறியுள்ள நிலையில் தான், மியன்மாரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டிருக்கிறது.

மேலதிக செய்திகளுக்கு  https://www.virakesari.lk/article/100513

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாதிக்கப்பட்டோருக்கு விடிவைத்தருமா ஐ.நா.வின் 46 ஆவது கூட்டத்தொடர் ?

மூன்று தசாப்தகாலப்போரின் வடுக்களைச் சுமந்துகொண்டு வாழும் தமிழ்மக்கள்,  கடந்த  பத்து வருடகாலமாகத் தமக்கான விடிவெள்ளியென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையையே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மேலதிக செய்திகளுக்கு  https://www.virakesari.lk/article/100950

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழர்களின் நீதிக்கோரிக்கையும் கருத்துருவாக்கச் சவாலும்

வல்லரசுகளின் நலன்களுக்கும் தனிப்பட்ட அரசியல் தலைமைத்துவங்களினது நலன்களுக்கும் அப்பால், சர்வதேச மனித உரிமைகள் விழுமியங்களுக்கான சவாலாக தமிழ் மக்களின் நீதி கோரல் கருத்துருவாக்கப்பட வேண்டிய நிலையை அடைந்துள்ளது. இதில் திடமான நிலைப்பாட்டினை தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் எட்டவேண்டியிருப்பதும் முக்கியமான விடயமாகின்றது.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/100902

-------------------------------------------------------------------------------------------------------------------------------

மெய்நிகர் போர்க்களம்

அதுமாத்திரமன்றி பொறுப்புக்கூறல் விவகாரம் இலங்கை அரசின் கைகளை மீறிச் செல்லும் சூழலை உருவாக்குமா என்பதும் இந்தக் கூட்டத்தொடரில் தான் வெளிப்படப் போகிறது.

அவ்வாறு செல்லுமானால், அது சர்வதேச அளவில் இலங்கைக்கு பெரும் பின்னடைவு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/100893

----------------------------------------------------------------------------------------------------------------------------------

மற்றுமொரு ஜெனிவாக் கூட்டத்தொடர்: எதனை சாதிக்க முடியும்? 

சீனா இலங்கைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வாக்கெடுப்பில் இலங்கையை ஆதரித்து வாக்களிக்கமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தேவை ஏற்படும் பட்சத்தில் சீனா இலங்கைக்கு ஆதரவு கோரி அங்கு பிரசாரத்தில் ஈடுபடும்.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/100881

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை சார்பிலும்  ஐ.நா.வில் இம்முறை பிரேரணை

இலங்கை இறைமையுள்ள நாடு என்ற வகையில் எமது அரசியலமைப்புக்கு உட்பட்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இடமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை அரசாங்கம் சார்பில் இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரேரணை ஒன்று தாக்கல் செய்யப்படும்

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/100934

--------------------------------------------------------------------------------------------------------------------------------

முதல் அமர்வில் குட்டரஸ், பச்லெட் உரையாற்றுவர் ; நாளை இரவு தினேஷ் குணவர்த்தன உரையாற்ற ஏற்பாடு

மனித உரிமை ஆணைாயாளரின்  முதல் உரையின்போதும் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/100929

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவாவில் இந்தியா இலங்கையை ஆதரிக்கும் : ஜனாதிபதியின் கையெழுத்துடன் மோடிக்கு கடிதம்

இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதம் எமது தூதரகம் ஊடாக இந்திய பிரதமருக்கு கிடைத்திருக்கின்றது.

மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/100925

---------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 46 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 46 ஆவது வழக்கமான அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் பெப்ரவரி 22 (இன்று) ஆரம்பமாகிறது.

மேலதிக தகவல்களுக்கு https://www.virakesari.lk/article/100914

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜெனிவா சமர் நாளை ஆரம்பம் : 24 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம் - புதிய பிரேரணையும் வருகிறது 

முதல் மூன்று நாட்கள் பிரதான ஆரம்ப அமர்வுகள்  இடம்பெறவுள்ளன.  22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி 12 மணிவரை நடைபெறவுள்ள ஆரம்ப அமர்வுகளில்    பல நாடுகள் உரையாற்றவுள்ளன.  அதாவது பல நாடுகளின்  வெளிவிவகார அமைச்சர்கள் ஆரம்ப அமர்வில் உரையாற்றவுள்ளனர். 

மேலதிக தகவல்களுக்கு https://www.virakesari.lk/article/100868