VIRAKESARI ONLINE

--- -Reporting Sri Lanka News in Tamil

 
   You are in :   Home »  News »  : Full Story  ---------------------------------------------------------------------------------------  Contact us | Add to favourites | Fonthelp
நிபுணர் குழுவை நியமிப்பது நியாயமற்றது _    
வீரகேசரி வாரவெளியீடு 3/7/2010 8:44:45 AM Share
_Follow Virakesari on Twitter
  ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படுவது கோரப்படாததும் நியாயமற்றதுமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகம் நேற்று விடுத்த ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான ஆலோசனைகளை வழங்குமுகமாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் விசேட நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் கடந்த பெப்ரவரி 25 இல் எழுதிய கடிதம் தொடர்பில் மார்ச் 5 ஆம் திகதி செயலாளர் நாயகத்துக்கும் ஜனாதி பதிக்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கருத்தை அழுத்தமாகத் தெரிவித்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பெரும் அளவிலான யுத்தத்தின்போது பாரிய மனித உரிமைகள் மீறல்களும் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் மரணமும் சம்பவித்துள்ள ஏனைய நாடுகள் தொடர்பில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்..

உலகில் இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை 9 மாதங்களுக்கு முன் இலங்கை இராணுவ ரீதியில் தோற்கடித்துள்ளதெனவும் தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய செயற்பாட்டில் அதனை வலுப்படுத்த அரசாங்கம் முயன்றுவருகின்றது எனவும் செயலாளர் நாயகத்திற்கு கூறப்பட்டுள்ளதெனவும் கூறப்பட்டுள்ளது. நாடு பூராகவும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் ஆலோசனைக் குழுவொன்றை செயற்படுத்தும் அத்தகைய நோக்கம் நிச்சயமாக ஒரு தலையீடாக உணரப்படும்..

அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலின் போது இத்தகைய தலையீடு தொடர்பில் ஆர்வமுள்ள சக்திகள் எவ்வாறு ஐக்கிய நாடுகளையும் ஏனைய அங்கத்தவர்களையும் தூண்ட முயற்சித்தன என்பதை நினைவுபடுத்திய ஜனாதிபதி ராஜபக்ஷ, அந்தத் தேர்தல் சுதந்திரமானதும் நேர்மையானதுமானதென சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்..

இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினாலும் சில அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்ட தூண்டுதல்களினால் உருவாக்கப்பட்டதாகும். அவர்கள் இலங்கைக்கு எதிராக திட்டமிட்டு செயற்படுவது தெளிவாகத் தெரிகிறது. மேற்குலகத்தின் சில பிரிவுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்படும் தேர்தல் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளன என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்..

இலங்கையின் சில பகுதிகளில் யுத்த சூழ்நிலை தொடர்பான விடயங்கள் குறித்த அறிக்கையை ஆராய விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் ஏற்கெனவே நல்லிணக்க நடவடிக்கை தொடர்பில் முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு அறிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், செனல் 4 வீடியோ தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேடபிரதிநிதி பிலிப் அல்ஸ்டனின் நடவடிக்கை ஆகி யவை தொடர்பாக ஆராய்வதற்கு ஏற்கனவே திறமையானவர்கள் செயலில் இறங்கியுள்ளார்கள் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்..

தீர்மானிக்கப்பட்டுள்ள அத்தகைய ஆலோசனைக்குழு சம்பந்தமான அந்த நியமனமும் அவசியமானது. பொருத்தமானதுமான நடவடிக்கையை இது தொடர்பில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இலங்கைக்கு உருவாக்கும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கு வலியுறுத்திக் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளின் சகல உறுப்பினர்களையும் சமமாக நடத்தும் முறையை ஐக்கிய நாடுகளின் சாசனப் படி இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அதேவேளை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருக்கும் விதிமுறையை மதிப்பதாகவும் ஜனாதிபதி அழுத்தமாகக் கூறியுள்ளார். தொலைபேசி உரையாடல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கு தான் கடிதம் ஒன்றை விரைவில் எழுதப் போவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ___ E-mail to a friend 


Print This Page E-Mail to a Friend BACK
Comments
 
இன்று ஈ-பேப்பர் முதல் பக்கம்
epaper.virakesari.lk
www.vidivelli.lk
;
www.virakesari.lk on Facebook
 
Site best viewed in IE ver 6.0 and above @ 1024 x 768 resolution | Technical Contact: webmaster@virakesari.lk| Online Editorial: onlinenews@virakesari.lk   
© 2010 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online