VIRAKESARI ONLINE

--- -Reporting Sri Lanka News in Tamil

 
   You are in :   Home »  News »  : Full Story  ---------------------------------------------------------------------------------------  Contact us | Add to favourites | Fonthelp
பொதுத் தேர்தலின் பின்னர் ஜி.எஸ்.பி. குறித்து பேசத் தயார்: பேர்னாட் சாவேஜ் _    
வீரகேசரி இணையம் 3/5/2010 10:30:20 AM Share
_Follow Virakesari on Twitter
  ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பாகவும், ஏனைய விடயங்கள் குறித்தும் பேசத் தயார் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்த கருத்துக்களை இலங்கை பின்பற்றினால் இந்த வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது எனத் தெரிவித்த சாவேஜ், எந்த நாட்டையும் சிரமத்திற்குள்ளாக்குவது ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமல்ல எனவும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை நிறுத்தம் அடுத்த ஓகஸ்ட் மாதத்தில் நடைமுறைக்கு வர இருக்கிறது என்றும் இதற்கு முன்னர் இந்தப் பிரச்சினையைச் சாதகமாகத் தீர்க்கலாம் எனத் தான் நம்புவதாகவும் சாவேஜ் மேலும் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. ___ E-mail to a friend 


Print This Page E-Mail to a Friend BACK
Comments
 
இன்று ஈ-பேப்பர் முதல் பக்கம்
epaper.virakesari.lk
www.vidivelli.lk
;
www.virakesari.lk on Facebook
 
Site best viewed in IE ver 6.0 and above @ 1024 x 768 resolution | Technical Contact: webmaster@virakesari.lk| Online Editorial: onlinenews@virakesari.lk   
© 2010 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online