“தன் குற்றங்களை ஏற்றுக்கொண்டு அதனை மாற்றிக் கொள்பவனால் மட்டுமே முன்னேற முடியும்": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15.12.2018)

2018-12-15 10:03:05

15.12.2018 விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 29 ஆம் நாள்  சனிக்கிழமை. 

சுக்கில பட்ச அஷ்டமி திதி பின்னிரவு 3.12 வரை.  அதன் மேல் நவமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் முன்னிரவு 10.58 வரை. அதன் மேல் உத்திரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை அஷ்டமி. மரண யோகம்.  கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மகம், பூரம். சுபநேரம் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45. ராகுகாலம் 9.00– 10.30, எமகண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வாரசூலம் – கிழக்கு. (பரிகாரம் –தயிர்).  மைதுலாஷ்டமி.

மேடம் : நன்மை, யோகம்

இடபம் : பகை, விரோதம்

மிதுனம் : பிணி, பீடை

கடகம் :  அன்பு, ஆதரவு

சிம்மம் : மகிழ்ச்சி, சந்தோசம்

கன்னி : தோல்வி, கவலை

துலாம் : இலாபம், லக்ஷ்மீகரம்

விருச்சிகம் : செலவு, விரயம்

தனுசு : சுகம், ஆரோக்கியம்

மகரம் :  கவலை, கஷ்டம்

கும்பம் : வெற்றி, யோகம்

மீனம் :  சிக்கல், சங்கடம் 

சகல சிவாலயங்களிலும் அதிகாலை திருவெம்பாவை ஓதுதல். நாளை மார்கழி முதலாம் நாள். தனூர் மாத பூஜை ஆரம்பம். ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாமாலை ஓதும் வைபவம்.

(“தன் குற்றங்களை ஏற்றுக்கொண்டு அதனை மாற்றிக் கொள்பவனால் மட்டுமே முன்னேற முடியும்”) 

சுக்கிரன், சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:   6, 7

பொருந்தா எண்கள்:   3, 9, 8

அதிர்ஷ்ட வர்ணம்:  பச்சை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right