"பணத்தை கெட்ட வழியில் இழப்பது குற்றம், அதைவிட குற்றம் கெட்ட வழியில் தேடுவது.”இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (18-11-2018)..!

2018-11-18 11:04:53

18.11.2018 விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 2 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

சுக்கிலபட்ச தசமி திதி பகல் 11.51 வரை. அதன் மேல் ஏகாதசி திதி பூரட்டாதி நட்சத்திரம் மாலை 3.33 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை ஏகாதசி. சித்தாமிர்த யோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: மகம், பூரம். சுபநேரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 3.15– 4.15, ராகு காலம் 4.30– 6.00, எமகண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார சூலம் – மேற்கு (பரிகாரம்– வெல்லம்) தெஹிவளை விஷ்ணு ஆலயத்தில் திருமஞ்சனம். அன்னதானம். 

மேடம் : ஜெயம், வெற்றி

இடபம் : கவலை, கஷ்டம்

மிதுனம் : உழைப்பு, உயர்வு

கடகம் : ஊக்கம், உயர்வு

சிம்மம் : பேராசை, நஷ்டம்

கன்னி : சோதனை, சங்கடம்

துலாம் : ஏமாற்றம், கவலை

விருச்சிகம் : நன்மை, யோகம்

தனுசு : உற்சாகம், மகிழ்ச்சி

மகரம் : தெளிவு, அமைதி

கும்பம் : பொறுமை, யோகம்

மீனம் : செலவு, விரயம்

“ஸ்ரீ வைஷ்ணவம்” த்வயம் நம்மாழ்வார் (1.6.9) தர்ம வரும் பயனாய் திருமகளார் தனிக்கேள்வன் பெருமையுடைய பிரானார். இருமை வினை கடிவாரே” ஸ்ரீதேவியாகிய பெரிய பிரட்டியாரின் பயன்களின் தொகுதியாக திருவடிவம் கொண்டவள். அவளின் ஒப்பற்ற கணவனாக இருப்பதால் எம் பெருமான் இரு வினைகளை நீக்குவதில் பெருமை உடையவன் ஆகிறான். (தொடரும்)

(அதிகாரம் செய்வதற்கு முன் அடங்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதிகாரத்தில் சாதிப்பதை விட அன்பினால் சாதிக்கலாம்” –சோலன்)

செவ்வாய், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இலேசான நீலம், சிவப்பு, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right