19.03.2016 மன்­மத வருடம் பங்­குனி மாதம் 06ஆம் நாள் சனிக்­கி­ழமை.

Published on 2016-03-19 14:44:47

சுக்­கில பட்ச ஏகா­தசி திதி பகல் 1.39 வரை. அதன் மேல் துவா­தசி திதி. பூசம் நட்­சத்­திரம் பகல் 12.50 வரை. பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர் பிறை துவா­தசி. சித்­த­யோகம் பகல் 12.50 அதன் மேல் மர­ண­யோகம். கரிநாள் (சுபம் விலக்­குக) சுக்­கில பட்ச ஸர்வ ஏகா­தசி ஸ்ரீமன் நாரா­ய­ணனை நோக்கி உப­வா­ச­மி­ருந்து வழி­படல் நன்று. சுப­நே­ரங்கள் காலை 7.30 – 8.30 மாலை 4.30 – 5.30 ராகு­காலம் 9.00 – 10.30 எம­கண்டம் 1.30 – 3.00 குளிகை காலம் 6.00 – 7.30. வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்) மேல் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மூலம், பூராடம்.

மேடம் : மேன்மை, உயர்வு

இடபம் : உற்­சாகம், வர­வேற்பு

மிதுனம் : வரவு, லாபம்

கடகம் : முயற்சி, முன்­னேற்றம்

சிம்மம் : பாசம், அன்பு

கன்னி : புகழ், சாதனை

துலாம் : உழைப்பு, உயர்வு

விருச்­சிகம் : லாபம், லஷ்­மீ­கரம்

தனுசு : உயர்வு, மேன்மை

மகரம் : பொறுமை, நிதானம்

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : பணிவு, பாசம்

திருப்­பா­ணாழ்வார் அரு­ளிச்­செய்த “அம­ல­னா­தி­பிரான்” பாசுரம் 3. நேற்­றைய பாசு­ரத்தில் இறை­வனின் சிவந்த பீதாம்­ப­ரத்தை பாடிய ஆழ்வார் இன்­றைய பாசு­ரத்தில் இறை­வனின் திரு­நாபிக் கம­லத்தைப் பாடு­கின்றார். “மந்­திபாய் வட வேங்­கட மாமலை வான­வர்கள் சந்தி செய்ய நின்றான். அரங்­கத்­த­ரவின் அணையான். அந்­திபோல் நிறத்­தா­டையும் அதன் மேல­யனைப் படைத்த தோரெழில் உந்தி மேல­தன்றோ அடி­யே­னுள்­ளத்து இன்­னு­யிரே. பொரு­ளுரை; குரங்­குகள் திரு­ம­லையில் ஒரு கிளை­யி­லி­ருந்து தாவி ஊஞ்­ச­லாடும். தேவர்கள் திரு­வேங்­க­ட­நா­தனை ஆரா­தித்து திரு­ம­லையில் நிற்பர். ஆதி­சேடன் மீது பள்ளி கொண்ட திரு­வ­ரங்கன் சிவப்புப் பட்­டா­டையும் அதன் மேற்­புறம் நான்­மு­கனைப் படைத்த ஈடில்லா லாவண்­யத்­தை­யு­டைய திரு­நாபிக் கம­லத்­திலும் எனது அரு­மை­யான உயிர் குடி கொண்டு விட்­டது. (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

சூரியன், சனி கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5

பொருந்தா எண்கள்: 8 – 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்