பெற்ற அறிவை மற்றவருக்கு பகிர்ந்து கொடு: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09-11-2018)..!

2018-11-09 09:44:56

09.11.2018 விளம்பி  வருடம் ஐப்­பசி மாதம் 23ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கில பட்ச துவி­தியை திதி  முன்­னி­ரவு 10. 26 வரை. அதன்மேல் திரி­தியை திதி. அனுஷம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.14 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை துவி­தியை, சித்­த­யோகம்.  சுப­நே­ரங்கள் காலை 09.15 – 10.15, மாலை 4.45– 5.45. ராகு­காலம்  10.30– 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00. வார­சூலம் – மேற்கு. (பரி­காரம் –வெல்லம்). சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பரணி, கார்த்­திகை. சுப­மு­கூர்த்த நாள். கந்­த­சஷ்டி விரதம். சந்­தி­ர­த­ரி­சனம். பூசலார் நாயனார் குரு­பூஜை. யமத்­து­வி­தியை.

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம் 

இடபம் : வெற்றி, யோகம்  

மிதுனம் : செலவு, பற்­றாக்­குறை 

கடகம் :  அமைதி, தெளிவு

சிம்மம் : பணம், பரிசு  

கன்னி : கவனம், எச்­ச­ரிக்கை

துலாம் : கீர்த்தி, புகழ்

விருச்­சிகம் : விரயம், செலவு

தனுசு : நிறைவு, பூர்த்தி 

மகரம் :  புகழ், பாராட்டு

கும்பம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம் 

மீனம் :  தெளிவு, அமைதி 

 ‘ஸ்ரீ வைஷ்­ணவம்’ திரு­வாய்­மொழி. நம்­மாழ்வார் எம்­பெருமானின் ஐந்து நிலை­க­ளான பரம், வியூகம், விபவம், அந்தர் யாமித்வம், அர்ச்­சா­வ­தாரம் என்­ப­ன­வற்றில் அனு­ப­வித்து பாசு­ரங்­க­ளாக இயற்­றினார். எம்­பெ­ருமான் நாரா­ய­ணனே பரன் என்றும் அவனை அடைய பிர­பத்­தியே வழி­யென்று திருவாய் மொழியில் அரு­ளி­யுள்ளார். நம்­மாழ்­வாரைப் பற்றி ஈஸ்­வர முனிகள் அருளிச் செய்த தனியன் “திரு­வ­ழுதி நாடென்றும் தென்­கு­ரு­கூ­ரென்றும் மரு­வி­னிய வன்­பொரு நல்­லென்றும் அரு­ம­றைகள் அந்­தாதி செய்­தா­ன­டி­யி­னையே யெப்­பொ­ழுதும் சிந்­தியாய் நெஞ்சே தெளிந்து”. ( தொடரும்)

(“எவ­ராலும் வெல்­ல­மு­டி­யாத இதயம் இருக்கும் போது எல்லாம் போய்­விட்­டதே என்று கவ­லைப்­ப­டாதே”) 

செவ்வாய், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்         :    5– 6  

பொருந்தா எண்கள்        :     2– 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்   :  சிவப்பு, நீலம், 

மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right