"மனதில் பட்டதையே பேசுமுடியாவிட்டால் மௌனமாய் இரு...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (05-11-2018)..!

2018-11-05 09:18:24

05.11.2018 விளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 19 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச திர­யோ­தசி திதி பின்­னி­ரவு 11.53 வரை. பின்னர் சதுர்த்­தசி திதி. அஸ்தம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.18 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை திர­யோ­தசி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரட்­டாதி, உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00 குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம் கிழக்கு. (பரி­காரம்– தயிர்) கிருஷ்­ண­பட்ச ஸோம மகா பிர­தோஷம். சுப­மு­கூர்த்த தினம். மாத சிவ­ராத்­திரி. தனிய நாள். யம­தீபம். தன்­வந்ரி ஜெயந்தி. இரவில் நரக சதுர்த்­தசி ஸ்நானம். (பின்­னி­ரவு) 

மேடம் : அமைதி, மகிழ்ச்சி

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : அன்பு, பாசம்

கடகம் , நற்­செயல், பாராட்டு

சிம்மம் : வெற்றி, யோகம்

கன்னி                :காரி­ய­சித்தி,அனு­கூலம்

துலாம் : கவனம், எச்­ச­ரிக்கை

விருச்­சிகம் : அன்பு, ஆத­ரவு

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் : தனம், சம்­பத்து

கும்பம் : பிர­யாணம், செலவு

மீனம் : அமைதி, சாந்தம்

ஸ்ரீ வைஷ்­ணவம் “திருவாய் மொழி” பன்­னிரு ஆழ்­வார்கள் அருளிச் செய்த நாலா­யிரம் திவ்ய பிர­பந்தம் ஆன்­மிக உல­குக்கு ஒரு பெரும் பொக்­கிஷம். நாலா­யிரம் பிர­பந்தம் என்னும் தமிழ் வேதத்தின் மணி­மா­லையில் திருவாய் மொழி நடுக்­கல்­லாகப் பிர­கா­சிக்­கின்­றது. ஸ்ரீ வைஷ்­ண­வத்தின் பூர்­வாச்­சா­ரி­யார்­களால் வியாக்­கி­யானம் செய்­யப்­பட்டு திரு­வ­ரங்கப் பெரு­மா­னா­லேயே புகழ்ந்து பாடும் சிறப்பு திருவாய் மொழிக்கு உண்டு. எம்­பெ­ருமான் இரா­மா­ய­ணத்தை யவ­கு­சர்கள் சொல்லிக் கேட்டான். திருவாய் மொழியை பிராட்­டி­யுடன் கேட்டு அனு­ப­வித்­ததால் திருவாய் மொழிக்கு தனிச் சிறப்பு. சாம வேதத்தின் சார­மான திருவாய் மொழி இனி­வரும் நாட்கள் தொடரும். 

(“மன­சாட்சி நீதி­ப­தி­யா­யி­ருந்து தண்­டனை தருமுன் நண்­ப­னா­யி­ருந்து எச்­ச­ரிக்கை செய்யும்”) –கதே

புதன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

பொருந்தா எண்கள்: 2, 8, 1

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், சிவப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right