17.03.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 04ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2016-03-17 08:28:53

சுக்கிலபட்ச நவமி திதி பகல் 2.26 வரை. அதன் மேல் தசமிதிதி. திருவாதிரை நட்சத்திரம் பகல் 12.23 வரை. பின்னர் புனர் பூசம் நட்சத்திரம் சிரார்த்த திதிகள் வளர்பிறை நவமி தசமி திதித் வயம். மரண யோகம் பகல் 12.23 வரை. அதன் மேல் தசமிதிதி. மேல் நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அனுஷம், கேட்டை. சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30 பிற்பகல் 12.30 – 1.30. ராகுகாலம் 1.30 – 3.00 எமகண்டம் 6.00 – 7.30. குளிகை காலம் 9.00 – 10.30. வாரசூலம் – தெற்கு (பரிகாரம் – தைலம்). 

மேடம் : வெற்றி, புகழ்

இடபம் : புகழ், செல்வாக்கு

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : உழைப்பு, முன்னேற்றம்

சிம்மம் : லாபம், லஷ்மீகரம்

கன்னி : நிறைவு, பூர்த்தி

துலாம் : விவேகம், வெற்றி

விருச்சிகம் : நன்மை, யோகம்

தனுசு : நோய், வருத்தம்

மகரம் : மகிழ்ச்சி, நன்மை 

கும்பம் : கவலை, கஷ்டம்

மீனம் : தடை, தாமதம்

திருப்பாணாழ்வார் அருளிச் செய்த “அமலனாதி பிரான்” அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின் மலன் நீதி வானவன் நீள் மதினரங்கத்தம்மான் திருக்கமல பாதம், வந்து என் கண்ணிலுள்ளன ஒக்கின்றதே! பொருளுரை; குற்றம் குறைகள் ஒன்றும் இல்லாதவனாய், உலகுக்கு காரணமானவனாய், மாயையில் மயங்கிக் கிடக்கும் என்னை தன் அடியார்க்கு அடியனாக்கி பேரொளியைத் தருபவனாய், தேவர்களின் தலைவனாய், மணமுள்ள சோலைகள் சூழ் திருமலையிலே வந்து அருள்பவனாய் நான் எந்த உபயமும் செய்யாதிருக்கும் போதே என்னை தரிசனம் செய்ய வைத்ததால் கருணை ஒளிமிக்கவனாய், பரிசுத்தனாய், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதமின்றி அனைவரையும் காப்பவனாய் உயர்ந்த மதிள்கள் உடைய திருவரங்கத்தில் கண் வளரும் எம் பெருமானின் திருவடித் தாமரைகளைக் காணும் போது அவை என் விழிக்குள் புகுந்தது போல் தோன்றியது (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

சனி, சந்திரன் ஆதிகம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்:  1 – 5 – 7

பொருந்தா எண்:  8 – 9

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)