16.03.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 3 ஆம் நாள் புதன்கிழமை

Published on 2016-03-17 08:27:11

சுக்கிலபட்ச அஷ்டமி திதி பிற்பகல் 3.30 வரை. அதன் மேல் நவமி திதி மிருக சீரிஷம். நட்சத்திரம் பகல் 12.50 வரை. பின்னர் திருவாதிரை நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை. அஷ்டமி. சித்தியோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் விசாகம், அனுஷம். சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 12.00 – 1.30, குளிகை காலம் 10.30– 12.00, எமகண்டம் 7.30 – 9.00 வார சூலம் வடக்கு (பரிகாரம் பால்) 

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : சுகம், ஆரோக்கியம்

மிதுனம் : லாபம், லஷ்மீகரம்

கடகம் : அன்பு, இரக்கம்

சிம்மம் : இன்சொல்,வரவேற்பு

கன்னி : வரவு, லாபம்

துலாம் : ஈகை, புண்ணியம்

விருச்சிகம் : பகை, விரோதம்

தனுசு : அன்பு, ஆசை

மகரம் : சுபம், மங்களம்

கும்பம் : வாழ்வு, வளம்

மீனம் : புகழ், சாதனை

நாளை முதல் ஆழ்வார்களில் 11 ஆவது ஆழ்வாராக அவதரித்த திருப்பாணாழ்வார் அருளிய “அமலன் ஆதி பிரான்” பாசுரங்கள். அவதரித்தது திரு  உறையூரில் 8 ஆம் நூற்றாண்டு. களியுகம் 343. துன்மதி வருடம். கார்த்திகை மாதம். ரோகிணி நட்சத்திரம். திருமாலின் மார்பில் உள்ள ஸ்ரீவத்ஸம்  என்னும் மறுவில் அம்சமாக அவதரித்தவர். பெருமானின் பாதாதி கேசம் வரை அனுபவித்து ???????பேரானந்தம் அடைந்தவர். இவர் தம் கடைசி பாசுரத்தில் அண்டர்கோன் அனி அரங்கன் என் அமுதினைக் கண்கள் மற்றொன்றினைக் காணாவே எனப் பாடி திருவரங்கன் திருவடிகளில் ஐக்கியமானவர் (திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்)

(“தன்னம்பிக்கையை கைக் கொள்ளுங்கள் போதும் வேறு எவர் துணையும் தேவைப்படாது”) 

கேது, சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)