15.03.2016 மன்மத வருடம் பங்குனி மாதம் 02ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

2016-03-16 09:25:12

சுக்கிலபட்ச ஸப்தமி திதி மாலை 5 மணிவரை. அதன் மேல் அஷ்டமி திதி. ரோகிணி நட்சத்திரம் பகல் 1.41 வரை. பின்னர் மிருகசீரிஷம் நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை. ஸப்தமி. அமிர்த சித்தியோகம். மேல் நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சுவாதி, விசாகம். சுபநேரங்கள் காலை 7.30 – 8.30, மாலை 4.30 – 5.30. ராகுகாலம் 3 – 4.30. எமகண்டம் 9 – 10.30. குளிகை காலம் 12 – 1.30 வாரசூலம் – வடக்கு (பரிகாரம் – பால்). 

மேடம் - நோய், வருத்தம்

இடபம் - திடம், நம்பிக்கை

மிதுனம் - பகை, விரோதம்

கடகம் - தடை, இடைஞ்சல்

சிம்மம் - வரவு, லாபம்

கன்னி - ஆசை, நஷ்டம்

துலாம் - நலம், ஆரோக்கியம்

விருச்சிகம் - லாபம், லஷ்மீகரம்

தனுசு - அன்பு, இரக்கம்

மகரம் - பிரீதி, ஜெயம்

கும்பம் - வெற்றி, அதிர்ஷ்டம்

மீனம் - சுகம், ஆரோக்கியம்

தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் அரு­ளிய “திரு­மலை” பாசுரம் 45. “வள­வெழும் தவ­ள­மாட மதுரை மாந­க­ரந்­தன்னுள் கவ­ளமால் யானை கொன்ற கண்­ணனை அரங்­க­மாலைத் துவளத் தொண்­டாய தொல் சீர்த் தொண்­டரடிப் பொடிசொல் இணை­யு புன் கவி­தை­யேலுந் எம் பிராற்கு இனி­ய­வாறே” பொரு­ளுரை: அழகு மிகுந்த வெண்­ணிற மாடங்­க­ளு­டைய வட­ம­து­ரையில் கவளம் கவ­ளமாய் சோறு உண்ணும் பெருத்த குவ­ல­யா­பீடம் என்ற யானையைக் கொன்ற “துவா­ரகா” நிலைய கண்­ணனை ரங்­க­நா­தனை குறித்து திருத்­துளாய் தொண்­டுக்கு தன்னை அர்ப்­ப­ணித்­த­வரும் இயற்கை பகவத் பக்­தியில் அடி­மைப்­பட்டு நின்­ற­வ­ரு­மான தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் அருளிச் செய்த திரு­மா­லை­யா­கிய இப்­பி­ர­பந்தம் சில குற்­றங்­களைக் கொண்­டி­ருப்­பினும் இது எம்­பி­ரா­னுக்கு இனி­யது. திரு­மாலை பாசு­ரங்கள் 45ஆம் முடி­வுற்­றது. (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

சுக்­கிரன், செவ்வாய் கிர­கங்­களில் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 6 – 9

பொருந்தா எண்: 3 – 2 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், சிகப்பு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right