"மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ( 03.10.2018)...!

2018-10-03 10:21:02

03.10. 2018 விளம்பி வருடம் புரட்டாதி மாதம் 17 ஆம் நாள் புதன்கிழமை.

கிருஷ்ண பட்ச நவமி திதி பின்னிரவு 10.22 வரை. பின்னர் தசமி திதி. புனர்பூசம் நட்சத்திரம் முன்னிரவு 9.26 வரை. பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய் பிறை நவமி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் மூலம், பூராடம்.சுபநேரங்கள் காலை 9.00– 10.00, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வாரசூலம் வடக்கு (பரிகாரம் பால்) குருப்பெயர்ச்சி: குருபகவான் நாளை (04.10.2018 வியாழன் இரவு நாழிகை 40.00 இரவு மணி 10.05 க்கு துலா இராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார்)  நாளைய பலன்கள்.

மேடம் : தனம், சம்பத்து

இடபம் : சுகம், ஆரோக்கியம்

மிதுனம் : நற்செயல், பாராட்டு

கடகம் : அதிர்ஷ்டம், நன்மை

சிம்மம் : செலவு, விரயம்

கன்னி : உயர்வு, மேன்மை

துலாம் : புகழ், சாதனை

விருச்சிகம் : ஆதாயம், லாபம்

தனுசு : அமைதி, சாந்தம்

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : பக்தி, ஆசி

மீனம் : உற்சாகம், வரவேற்பு

“விஷ்ணு சகஸ்ர நாமம்” யோகீஷ –யோகத்தை நிறைவேற்றுபவன். கஷாம–முக்தியடையச் செய்பவன். ஸுபர்ண –பிறவிக் கடலின் கரை சேர்ப்பவன். வாயு வாகன– கீழே நழுவியவர்களை மேலே தூக்கி விடுபவன். தநுர்தரன்– சாரங்க மென்ற வில்லைத் தரிப்பவன். தநுர்வேத–வில் வித்தையை உலகில் முதன் முதலாகத் தோன்றச் செய்தவன். அதம –யாராலும் அடக்க முடியாதவன். அபராஜிதன் –தன் ஆணை எவ்வகையிலும் தடை படாதவன். நிலந்தா –பிற தெய்வங்களை தானே நடத்துபவன் (தொடரும்)

(“செல்வம் என்பது பணம் என்பதில்லை. எதில் மனம் நிறைவுறுகிறதோ அதுவே செல்வம்” –ஆதி சங்கரர்)

குரு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 9

பொருந்தா எண்கள்: 3, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை கலந்த வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right