"கல்லைச் சலவை செய்யும் அருவியே இந்த மனிதனின் மனதையும் ஒரு முறை சலவை செய்து விட்டு செல்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் 24.09.2018

2018-09-24 10:05:20

24.09.2018 விளம்பி வருடம் புரட்டாதி மாதம் 8 ஆம் நாள் திங்கட்கிழமை.

சுக்கிலபட்ச சதுர்த்த திதி காலை 7.51 வரை. அதன்மேல் பௌர்ணமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 12.56 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி. பௌர்ணமி. மரணயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: மகம், பூரம். சுபநேரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 7.30– 9.00, எமகண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வாரசூலம் – கிழக்கு (பரிகாரம்– தயிர்) தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு ஆலயத்தில் பகல் ஸ்ரீசத்ய நாராயண பூஜை. அன்ன தானம்.

மேடம் : தெளிவு, அமைதி

இடபம் : மகிழ்ச்சி, களிப்பு 

மிதுனம் : இலாபம், லக் ஷ்மீகரம்

கடகம் : அசதி, வருத்தம்

சிம்மம் : பரிவு, பாசம்

கன்னி : அன்பு, பாசம்

துலாம் : நிறைவு, பூர்த்தி

விருச்சிகம் : வரவு, இலாபம்

தனுசு : தனம், சம்பத்து

மகரம் : நலம், ஆரோக்கியம்

கும்பம் : பக்தி, அனுக்கிரகம்

மீனம் : மறதி, விரயம்

"விஷ்ணு சகஸ்ர நாமம்" தொடர்ச்சி அபராஜிதன்– தன் அடியார்கள் தோல்வி அடையாமல் செய்பவன். விஷ்வமூர்த்தி – சகல புவனங்களையும் தன் உடலாகக் கொண்டவன். ஸ்ரீபதி – திருவாகிய மகாலக் ஷ்மியின் பதி. ஜோதி ஆதித்ய – திவ்யஜோதியான விசித்திர சூரியன். கண்டபரசு– கோடரியை தாங்கி பரசுராமனாக அவதரித்தவன். ஸர்வத்ருக் – எல்லாவற்றையும் காண்பவன். வியாச – வேதங்கள் நான்கையும் வகுத்தவன். வாசஸ்பதி – ஐந்தாம் வேதமான சரஸ்வதிக்கு சுவாமியானவன். ஸாம வேத ரூபி – ஸாம வேத ரூபமானவன். (தொடரும்…)

சுக்கிரன், சனிக் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர் பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right