14.03.2016 மன்மத வருடம் உத்தராயணம் சிசிர ருது பங்குனி (மீள) மாதம் 01ம் நாள் திங்கட்கிழமை

Published on 2016-03-14 07:42:37

சுக்கில பட்ச சஷ்டி திதி மாலை 6.48வரை. அதன் மேல் ஸப்தமி திதி. கார்த்திகை நட்சத்திரம் பி.ப. 2.50 வரை பின்னர் ரோகிணி நட்சத்திரம். சிரார்த்த திதி சூன்யம் மரணயோகம். காரடையான் நோன்பு காமாட்சி அம்மானை வழிபடல் நன்று. கீழ் நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி. சுபநேரங்கள் பகல் 9.30 –10.30 பிற்பகல் 12.30 – 1.30. ராகுகாலம் 7.30 – 9.00 எமகண்டம் 10.30 – 12.00 குளிகை காலம் 1.30 – 3.00 வாரசூலம் – கிழக்கு (பரிகாரம் – தயிர்) 

மேடம் : பகை, விரோதம்

இடபம் : நட்பு, உதவி

மிதுனம் : தடை, இடைஞ்சல்

கடகம் : களிப்பு, மகிழ்ச்சி

சிம்மம் : நோய், வருத்தம்

கன்னி : கவலை, கஷ்டம்

துலாம் : தடை, தாமதம்

விருச்சிகம் : பகை, எதிர்ப்பு

தனுசு : வரவு, லாபம்

மகரம் : நலம், அரோக்கியம்

கும்பம் : சுகம், இன்பம்

மீனம் : புகழ், பெருமை

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய “திருமாலை” பாசுரம் 44. பெண்ணுலாம் சடையினானும் பிரம்மனும் உன்னைக் காண்பான் எண்ணிலார் ஆழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப விண்ணுளார் வியப்ப வந்து யானைக்கு அன்று அருளையீந்த கண்ணறா! உன்னை யென்னோ? களைகாணாக் கருதுமாறே. பொருளுரை – கங்கை என்ற பெண் குடியிருக்கும் ஜடாமுடியைக் கொண்ட சிவபெருமானும் பிரம்மனும் உன்னைக்காண நெடுங்காலமாக எத்தனையோ பிரயளங்கள் முடிந்தும் தவம் செய்து வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றனர். இப்படி இருக்க, முதலை வாய்ப்பட்ட கஜேந்திரன் என்னும் யானை அலற சுதர்ஸனத்தை ஏவி யானையைக் காத்து அருளிய உன்னை எண்ணி நித்ய சூரிகள் வியக்கின்றனர். உன்னை எண்ணி எல்லோரும் சரணடைவதில் என்ன விந்தை  (ஆழ்வார் திருவடிகளே சரணம்)

புதன், சனி கிரகங்களில் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்:  5 – 1

பொருந்தா எண்:  8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  சாம்பல், நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)