"உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் 11.09.2018

Published on 2018-09-11 10:01:12

11.09.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 26 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச துவி­தியை திதி முன்­னி­ரவு 8.50 வரை. அதன்மேல் திரி­தியை திதி. உத்­திரம் நட்­சத்­திரம் காலை 6.20 வரை. அதன் மேல் அஸ்தம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.23 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம்: சிரார்த்த திதி வளர்பிறை, துவி­தியை அமிர்த சித்­த­யோகம் சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: பூரட்­டாதி. மகா­கவி பார­தியார் நினைவு நாள். சந்­தி­ர­த­ரி­சனம், ஸாம வேத உப­காமம், கல்கி ஜெயந்தி. 

மேடம் : மறதி, விரயம்

இடபம் : ஓய்வு, அசதி

மிதுனம் : புகழ், பாராட்டு

கடகம் : சங்­கடம், சோதனை

சிம்மம் : அமைதி, சாந்தம்

கன்னி : குழப்பம், சஞ்­சலம்

துலாம் : உயர்வு, ஊக்கம்

விருச்­சிகம் : ஜெயம், புகழ்

தனுசு : நலம், ஆரோக்­கியம்

மகரம் : பொறுமை, அமைதி

கும்பம் : பண வரவு, லாபம்

மீனம் : நன்மை, அதிர்ஷ்டம்

இன்று கல்கி அவ­தார தினம் “விஷ்ணு சகஸ்ர நாமத்தில் கல்கி அவ­தாரம் பற்றி" உக்ர தர்ம விரோ­தி­க­ளிடம் கடு­மை­யாக இருப்­பவன். ஸம்­வத்­சர ஆயு­தங்­களை தரித்­துக்­கொண்டு துஷ்­டர்­களை நிக்­ரஹம் செய்ய காலத்தை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருப்­பவன். தக்ஷ – மிலேச்­சரர் என்னும் கொள்­ளை­யர்­களை அழிக்கக் காத்­தி­ருப்­பவன். விஸ்­வ­தட்­சிண அஸ்­வ­மேத யாகம் செய்து பூமியை அந்­த­ணர்­க­ளுக்கு அளித்­தவன். விஸ்­தார வேத முறை­களை விரி­வாக வெளிப்­ப­டுத்­து­பவன். ப்ரமாணம், நன்மை, தீமை­களை பகுத்து அறி­பவன். அதர்த்த எல்லாம் நிரம்­பி­யவன். தான் விரும்­பு­வது ஏது­மில்­லா­தவன். ஸ்தாவ­ரஸ்­தானு கலி­யு­கத்தில் முடிவில் தீய­வர்­களை அழித்து தர்­மத்தை நிலை­நி­றுத்தக் காத்­தி­ருப்­பவன் (விஷ்ணு சகஸ்ர நாமம் தொடரும்) சந்­திரன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 5, 6

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இலேசான பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)