13.03.2016 மன்­மத வருடம் மாசி மாதம் 30 ஆம் நாள் ஞாயிற்­று­கி­ழமை.

Published on 2016-03-12 10:29:59

சுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி முன்­னி­ரவு 8.51 வரை. அதன்மேல் சஷ்டி திதி பரணி நட்­சத்­திரம் மாலை 4.13 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை. பஞ்­சமி சித்­த­யோகம். கார்த்­திகை விரதம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்தம், சித்­திரை. சுப­நே­ரங்கள் காலை 7.30 – 8.30, 10.30 – 11.30. மாலை 3.30 – 4.30. ராகு காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30. வார­சூலம் மேற்கு. (பரி­காரம் வெல்லம்.)

மேடம் : உழைப்பு, உயர்வு

இடபம் : யோகம், அதிர்ஷ்டம்

மிதுனம் : தெளிவு, அமைதி

கடகம் : உற்­சாகம், வர­வேற்பு

சிம்மம் : போட்டி, ஜெயம்

கன்னி : அன்பு, ஆத­ரவு

துலாம் :தனம், சம்­பத்து

விருச்­சிகம் : முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : பகை, விரோதம்

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : தடை, இடை­யூறு

மீனம் : நிறைவு, பூர்த்தி

தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் அரு­ளிய “திரு­மாலை” பாசுரம் 43 அம­ர­வோ­ரங்­க­மாலும் வேதமோர் நான்கும் ஓதித்­த­மர்­களில் தலை­வ­ராய சாதி அந்­த­ணர்­க­ளேனும் நமார்­களை பழிப்­பா­ராகில் நொடிப்­ப­தோ­ர­ளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும் அரங்­க­மா­ந­க­ரு­ளானே! பொரு­ளுரை: ஸ்ரீரங்­கத்தில் உறை­ப­வனே! ஒப்­பற்ற சிட்சை வியா­க­ரணம் சந்தஸ் நிருத்தம் சோதிடம் கல்பம் என்னும் ஆறு வேதாந்­தங்­க­ளையும் ரிக், ஜசூர், சாமம், அதர்­வணம் என்ற நான்கு வேதங்­க­ளையும் கற்று அடி­யார்­களில் முதல்­வ­ராய அந்­தண குலத்தில் பிறந்­த­வர்­க­ளா­யினும் தேவ­ரீ­ரு­டைய அடி­யார்­களை அவர்கள் குடியை கருதி அவ­ம­தித்தால் அந்த வினா­டி­யி­லேயே அவர்கள் சண்­டா­ளர்­க­ளா­கி­றார்கள்.

(ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

ராகு, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2,1, 5,6

பொருந்தா எண்கள்: 7, 4, 8

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், லேசான நீலம்