"வாழ்க்கையில் சம்பாதிக்கக்கூடிய மிகப் பெரிய விடயம் பொறுமை....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் 04.09.2018

Published on 2018-09-04 10:26:44

04.09.2018 விளம்பி  வருடம் ஆவணி மாதம்  19ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

கிருஷ்ணபட்ச நவமி திதி பிற்பகல் 2.03 வரை. அதன்மேல் தசமி திதி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 4.00 வரை. பின்னர் திருவாதிரை நட்சத்திரம். திதித்வயம் சிரார்த்த திதிகள் . தேய்பிறை நவமி தசமி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் அனுஷம், கேட்டை. சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45 , மாலை 4.45 – 5.45, ராகு காலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30. வாரசூலம் – வடக்கு. (பரிகாரம் –பால்) சனி ஜெயந்தி, சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி கருங்குவளை மலரால் அர்ச்சனை செய்ய சனி தோஷம் விலகும்.  மேஷம் : சுகம் , ஆரோக்கியம்

இடபம் : பக்தி, ஆசி

மிதுனம் : ஓய்வு,  அசதி 

கடகம் :  போகம், லாபம்

சிம்மம் : நன்மை, ஜெயம் 

கன்னி : விவேகம், வெற்றி

துலாம் : நிறைவு, திரவியலாபம் 

விருச்சிகம் : செலவு, பற்றாக்குறை 

தனுசு : அன்பு, ஆதரவு 

மகரம் : வெற்றி, அதிகாரம் 

கும்பம் : உழைப்பு, உயர்வு 

மீனம் : லாபம், லக் ஷ்மீகரம்.

‘விஷ்ணு சகஸ்ர நாமம்’  விஷ் எங்கும் வியாபித்தல் விஷ்ணு எம்பெருமானில் கலவாது எப்பொருளில்லை. பிரம்மா முதல் புல் ஈறாக (663). விஷ்ணு மூன்று உலகளந்த மாயன் (246). நாராணய எம்பெருமானுக்கு மட்டும் உள்ள தனித்திரு நாமம். இத்திருநாமம் வேறு எந்த தெய்வத்திற்கும் பொருந்தாது (351). சரீர ப்ருத் – சரீரத்தை தாங்கு பவன். பக்தர்களை தன் சரீரம் போல் இரட்சிப்பவன் (363). லஷ்மீவான் ஸ்ரீ மாந் (திருமகளார் தனிக்கேள்வன்) நித்திய மங்கலவான் (369). ராகு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 6 

பொருந்தா எண்கள்: 3 – 8 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அனைத்து வர்ணங்களும் கலந்த வர்ணங்கள்.இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)