"ஒருமுறை அறிவாளியுடன் பேசுவது, ஒரு மாதம் நூல்களைப் படிப்பதை விட அதிக நன்மை தரும்......!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் 01.09.2018

Published on 2018-09-01 12:15:16

01.09.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 16 ஆம் நாள் சனிக்­கி­ழமை. 

கிருஷ்­ண­பட்ச சஷ்டி திதி முன்­னி­ரவு 7.10 வரை. பின்னர் ஸப்தமி திதி. பரணி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.25 வரை. பின்னர் கார்த்திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை. சஷ்டி சித்தாமிர்த யோகம். கீழ்நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சித்திரை சுவாதி, சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 09.00– 10.30, எம­கண்டம் 01.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வார­சூலம் –கிழக்கு (பரி­காரம்– தயிர்) கிருஷ்ண பட்ச சஷ்டி விரதம். சனிபகவான் சிறப்பு ஆராதனை. இன்று கெருட தரிசனம் நன்று.

மேடம் : சந்தேகம், சலனம்

இடபம் : நன்மை, யோகம் 

மிதுனம் : நற்செயல், பாராட்டு

கடகம் : பேராசை, நஷ்டம்

சிம்மம் : பக்தி, ஆசி

கன்னி : அன்பு, இரக்கம்

துலாம் : வரவு, லாபம்

விருச்­சிகம் : சுபம், மங்களம்

தனுசு : உற்சாகம், மகிழ்ச்சி

மகரம் : உழைப்பு, உயர்வு

கும்பம் : மறதி, விரயம்

மீனம் : முயற்சி, முன்னேற்றம்

மகா பாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் மண் ணின் பாரம் நீக்க  வட மதுரை பிறந்தான்" "கிருத் வா பாராவத ரணம் ப்ருதிவ்யா ப்ருது லோசன" மோஹயித்வா ஜகத் ஸர்வ ம்கத் ஸ்வம் ஸ்தான முத்தமம்" (மகா பாரதம் மெசல 8.30) தாமரைக் கண்ணனான கண்ணன் பூமியின் பாரத்தைப் போக்கி உலகனைத்தும் மயங்கச் செய்து அழகினால் ஈர்த்து நித்ய விபூதிக்குச் சென்றான். இவ்வாறு எங்கு கண்டாலும் மகா பாரதத்தில் கண்ணன் பெருமை மகிமை காணக் கிடைக்கும் அவன் திருவாய் மலர்ந்தருளிய கீதை மகா பாரதத்தில் நடுவில் நின்ற நீலரத்தினம் "கிருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாயச நந்த கோபகுமாரய கோவிந்தாய நமோ நம்" எதிர்வரும் திங்கள் முதல் விஷ்ணு சகஸ்ரநாமம்

அதிர்ஷ்ட எண்கள்: 1,5.

பொருந்தா எண் : 8 

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)