"தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (31-08-2018)..!

Published on 2018-08-31 13:35:10

31.08.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 15 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச பஞ்­சமி திதி முன்­னி­ரவு 8.10 வரை. பின்னர் சஷ்டி திதி. அஸ்­வினி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.41 வரை. பின்னர் பரணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை. பஞ்­சமி அமிர்த சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்தம், சித்­திரை. சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 5.15– 6.00, ராகு­காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார­சூலம் –மேற்கு (பரி­காரம்– வெல்லம்)

மேடம் : வரவு, லாபம்

இடபம் : முயற்சி, முன்­னேற்றம்

மிதுனம் : நன்மை, யோகம்

கடகம் : பக்தி, ஆசி

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : புகழ், பாராட்டு

துலாம் : நலம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : சிக்கல், சங்­கடம்

தனுசு : சினம், பகை

மகரம் : செலவு, விரயம்

கும்பம் : அன்பு, பாசம்

மீனம் : பணிவு, செல்­வாக்கு

ஸ்ரீ கிருஷ்­ணனே சாட்சார்த் தர்மம்” யேச வேத விதோ விப்­ராயே சாத்யாத் மவிதோ ஜனா தே விதந்தி மகாத் மாநாம் கிருஷ்ணம் தர்மம் ஸநா­தரும்” (மகா பாரதம் நவ 71– 123) வேத­ம­றிந்த பிரா­ம­ணர்­களும் ஆத்ம சொரூ­ப­ம­றிந்த பெரி­யோர்­களும் மஹாத்­மா­வான கிருஷ்­ண­னையே பழை­மை­யான தர்­ம­மாக அறி­கிறார். சரீர சரீரி சம்­பந்தம் “ஸர்­வேஷாம் கில தர்­மானாம் உத்­தமோ வைஷ்­ணவோ விதி ரஷதே பகவாந் விஷ்னுர் பக்தா நாத்ம சரீர வத்” (மகா­பா­ரதம் அநு­சா­சன 36– 24) எல்லா தர்­மங்­க­ளைக்­காட்­டிலும் வைஷ்­ணவ தர்­மத்தை பின்­பற்­று­வது மிக வும் சிலாக்­கியம், பகவான் விஷ்­ணு­வான கிருஷ்ணர் பக்­தர்­களைத் தன் சரீ­ரத்தைப் போல காப்­பாற்­று­கின்றார். தொடரும்….

ராகு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)