"ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”).!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (30-08-2018)..!

Published on 2018-08-30 10:31:24

30.08.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 14 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சதுர்த்தி திதி முன்­னி­ரவு 8.41 வரை. அதன் மேல் பஞ்­சமி திதி. ரேவதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.29 வரை. பின்னர் அஸ்­வினி நட்­சத்­திரம். சிரார்த்த  திதி தேய்­பிறை சதுர்த்தி. சித்­தா­மிர்­த­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­திரம், அஸ்தம். சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, ராகு­காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம்– தெற்கு (பரி­காரம் –தைலம்)

மேடம் : செலவு, பற்­றாக்­குறை

இடபம் : சிக்கல், சங்­கடம்

மிதுனம் : பேராசை, நஷ்டம்

கடகம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

சிம்மம் : முயற்சி, முன்­னேற்றம்

கன்னி : வாக்­கு­வாதம், கலகம்

துலாம் : வரவு, லாபம்

விருச்­சிகம் : தெளிவு, அமைதி

தனுசு : கோபம், சினம்

மகரம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கும்பம் : பகை, எதிர்ப்பு

மீனம் : நற்­செயல், பாராட்டு

“மகா­பா­ர­தத்தில் கண்ணன்” மஹத்­யா­பதி ஸம்ப்­ராப்தே ஸமர்த்­தவ்யோ பகவான் ஹரி (மகா பாரதம் ஸபா 90– 42) “கண்ணன் ஆபத் பாந்­தவன். பேரா­பத்து வரும் காலத்தில் ஸ்ரீ கிருஷ்­ணனை நினைக்­க­வேண்டும். “துவா­ரஹா வாஸிந்” என்று திரௌ­பதை கூக்­கு­ர­லிட்டு அழைத்த உடனே அவ­ளுக்கு புடைவை சுரந்­த­தன்றோ “ஹரி கிருஷ்ணா துவா­ரகா வாஸிந் யாதவ நந்­தனா சங்க சக்ர கதா­பானே! துவா­ரகா நில­யாச்­யுத ர­க்ஷமாம் சர­ணா­கதம் (பாரதம் ஸபா 90– 42, 43) கிருஷ்­ணனே! துவா­ரகா வாஸியே யாத­வ­குல நந்­தனே! உன் அடி­யார்­களைக் காப்­பாற்­று­ப­வனே! நழுவ விடா­த­வனே! கோவிந்­தனே! செந்­தா­மரைக் கண்ணா! நான் படும்  அவஸ்­தையைப் பார் உன்னைச் சர­ணா­கதி அடைந்தேன். கர்த்­த­ருள்­வா­யாக

(தொடரும்…)

குரு, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 9

பொருந்தா எண்கள் : 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்  : மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)