"நாம் மகிழ்ச்சியாக இருக்கையில், நாம் விரும்புவோரையும், நாம் துயரத்தில் இருக்கையில், நம்மை விரும்புவோரையும் நினைத்துக்கொள்வோம். இதுவே உண்மை...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29-08-2018)..!

Published on 2018-08-29 10:12:15

29.08.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 13 ஆம் நாள் புதன்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி முன்­னி­ரவு 8.41 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் மாலை 6.47 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி: தேய்­பிறை திரி­தியை. சித்­த­யோகம்.  சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 8.30 – 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) இன்று செடி கொடிகள் வைக்க நன்று. மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூரம், உத்­திரம் கிருஷ்­ண­பட்ச சங்­க­ட­ஹர சதுர்த்தி.  

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்

இடபம் : இலாபம், லக் ஷ்­மீகரம்

மிதுனம் : உதவி, நட்பு

கடகம் : நற்­செயல், பாராட்டு

சிம்மம் : ஆதாயம், பண­வ­ரவு

கன்னி : அமைதி, நிம்­மதி

துலாம் : பேராசை, நஷ்டம்

விருச்­சிகம் : சினம், பகை 

தனுசு : சிக்கல், சங்­கடம் 

மகரம் : நோய், அசதி

கும்பம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

மீனம் : முயற்சி, முன்­னேற்றம்

“மகா­பா­ர­தத்தில் கிருஷ்ணன்” கிருஷ்ண ஏவ ஹி லோகாநா கிருஷ்­ணஸ்ய ஹிக்­ருதே பூத மிதம் (மகா­பா­ரதம் – ஸபா 38 – 23) கிருஷ்ணன் உல­கங்­களை சிருஷ்­டித்­தவன். சிருஷ்டி, ஸ்திதிலய கார­ண­மா­னவன். அசை­வ­னவும் அசை­யாத­வை யும் கிருஷ்­ண­னுக்­கா­கவே ஏற்­பட்டது. கிருஷ்ணன் என்றால், “கிருஷி பூவா­சக சப்­தோ­னச்ய நிர்­வி­ருதி வாசக விஷ்­ணுஸ்­தத்­பாவ யோகச்ய கிருஷ்ண இத்ய பீதி­யதே (பாரதம் 2–69–5) கிருஷி என்ற சொல் பூமியைக் குறிக்கும். ஆனந்­தத்­துக்கு விளை­நிலம் கிருஷ்ணன் ஆகையால் விஷ்­ணு­வா­னவன் கிருஷ்ணன் என்று அழைக்­கப்­ப­டு­கின்றான். (தொடரும்)

சந்­திரன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5 

பொருந்தா எண்கள்: 9, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)