12.03.2016 மன்­மத வருடம் மாசி மாதம் 29ஆம் நாள் சனிக்­கி­ழமை.

Published on 2016-03-12 10:29:21

சுபயோகம் 

தினசரி கிரகநிலை

12.03.2016 மன்­மத வருடம் மாசி மாதம் 29ஆம் நாள் சனிக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச சதுர்த்தி திதி முன்­னி­ரவு 11.05 வரை. அதன்மேல் பஞ்­சமி திதி. அஸ்­வினி நட்­சத்­திரம் மாலை 5.46 வரை. பின்னர் பரணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி. சுக்­கி­ல­பட்சம் சதுர்த்தி விரதம் சித்­த­யோகம். சம­நோக்கு நாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­தரம், அஸ்தம். சுப­நே­ரங்கள் காலை 7.30 – 8.30, பகல் 10.30 – 11.30. மாலை 4.30 – 5.30. ராகு­காலம் 9.00 – 10.30. எம­கண்டம் 1.30 – 3.00. குளிகை காலம் 6.00 – 7.30. வார­சூலம் – கிழக்கு. (பரி­காரம் – தயிர்)

மேடம் : செலவு, விரயம்

இடபம் : புகழ், பாராட்டு

மிதுனம் : தனம், சம்­பத்து

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் : கோபம், அவ­மானம்

கன்னி : முயற்சி, முன்­னேற்றம்

துலாம் : நன்மை, யோகம்

விருச்­சிகம் : நிறைவு, பூர்த்தி

தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் : பொறுமை, நிதானம்

கும்பம் : மறதி, விரயம்

மீனம் : சுகம், ஆரோக்­கியம்

தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் அரு­ளிய “ திரு­மாலை” பாசுரம் 42 பழு­திலா பொழு­க­ளாற்றும் பல சதுப்­பே­தி­மார்கள் இழி குலத்­த­வர்­க­ளேனும் எம் அடி­யார்­க­ளாகில் தொழுமின், கொடுமின், கொண்மின் என்று நின்­னோடும் ஒக்க வழி­பட அரு­ளி­னால்போல்! மதில் திரு­வ­ரங்­கத்­தானே! பொரு­ளுரை: உயர்ந்த மதில்கள் கொண்ட திரு­வ­ரங்­கத்­தானே. உன் பக்­தர்­களை கீழான குலத்தில் பிறந்­த­வர்­க­ளா­யினும் அடி­மைப்­பட்­ட­வர்­க­ளா­யினும் அவர்­களை வணங்க வேண்டும். சதுர் வேதங்கள் ஓது­ப­வர்­களால் உன் பக்தர் போற்­றப்­பட வேண்டும். அவர்­க­ளிடம் நன்­மை­யான பல உப­தே­சங்­களைப் பெற்­றுக்கொள். உன்­னிடம் உள்ள உயர்ந்த கருத்­துக்­களை அவர்­க­ளுக்கு உப­தே­சிப்­பா­யாக (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

குரு, சுக்­கிரன் கிரகங்களில் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 9

பொருந்தா எண்கள்: 3 – 6 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள்