"அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள். ...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (27-08-2018)..!

Published on 2018-08-27 09:45:45

27.08.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 11ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி முன்­னி­ரவு 7.16 வரை. அதன் மேல் துவி­தியை திதி. சதயம் நட்­சத்­திரம் மாலை 3.57 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை பிர­தமை. சித்­த­யோகம், மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: ஆயி­லியம், மகம். சுப­நே­ரங்கள்: காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 7.30 – 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம்– தயிர்) காயத்ரி ஜெபம். சிரா­வன பகுளப் பிர­தமை.

மேடம் : ஜெயம், புகழ்

இடபம் : முயற்சி, முன்­னேற்றம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : யோகம், அதிர்ஷ்டம்

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : திறமை, முன்­னேற்றம்

துலாம் : நிறைவு, ஆக்கம்

விருச்­சிகம் : புகழ், பாராட்டு

தனுசு : பணம், பரிசு

மகரம் : பகை, விரோதம்

கும்பம் : இன்பம், மகிழ்ச்சி

மீனம் : சந்­தோசம், மகிழ்ச்சி

“ஸ்ரீ வைஷ்­ண­வத்தில் இரா­மா­யணம்” ஸ்ரீ இ­ராமன் வழி­பட்ட ஸ்ரீரங்­க­நாதன் திரு­வ­ரங்­கத்தில் வீற்­றி­ருந்து ஸ்ரீ வைஷ்­ணவ “ஸ்ரீ” யாக விளங்­கு­வதே ஸ்ரீமத் ராமா­ய­ணத்தின் உயிர் நிலையும் அடி நிலை­யு­மாகும். இரு­பத்தி நாலா­யிரம் சுலோ­கங்­க­ளாக அமைந்த ஸ்ரீரா­மா­யணம் உலகு உய்ய வந்த இதி­காச சிரேஷ்டம். இதை இயற்­றிய ஸ்ரீவால்­மீகி பக­வானே “ஏகைக ம­க்ஷரம் பிரோக்தம் மகா­பா­தக நாசநம்” என்று கூறு­வதால் ஸ்ரீரா­ம­னை­விட மேலான தெய்­வ­முண்டோ? “ரமதே இதி­ராம ரமதே" என்றால் உள்ளங் குளிரப் பெறு­பவன். பிற­ருக்கு உதவி செய்து, அடி­யார்கள் உள்­ளத்தை குளிர வைப்­பவன் ஸுசீலன்” என்­ற­படி ததோ­ராம குணப்­பெ­ருக்கால் அனை­வ­ரை­யும மகிழ்­விப்­பவன். இரா­மா­யணம் முற்­றிற்று. நாளை ஸ்ரீ வைஷ்­ண­வத்தில் மகா­பா­ரதம் தொடரும்.

செவ்வாய், சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்:  5

பொருந்தா எண்கள்: 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், சிவப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)