"நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன: ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. ...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23-08-2018)..!

Published on 2018-08-23 09:25:14

23.08.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 07 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச துவா­தசி திதி  பகல் 12.13 வரை. பின்னர் திர­யோ­தசி திதி. பூராடம் நட்­சத்­திரம்  காலை 06.24 வரை. அதன் மேல் உத்­த­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி, வளர்­பிறை திர­யோ­தசி. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: திரு­வா­திரை. சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம் – தெற்கு (பரி­கா­ரம்—­தைலம்) பிர­தோஷ விரதம், சுப­மு­கூர்த்த தினம்.

மேடம் : பகை, விரோதம்

இடபம் : பொறுமை,  நிதானம்

மிதுனம் : நன்மை, யோகம்

கடகம் : வெற்றி, யோகம்

சிம்மம் : நலம், ஆரோக்­கியம்

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : நட்பு, உதவி

விருச்­சிகம் : ஜெயம், புகழ்

தனுசு : யோகம், அதிர்ஷ்டம்

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : அமைதி, சாந்தம்

மீனம் : பகை, எதிர்ப்பு

“ஸ்ரீ வைஷ்­ண­வத்தில் இரா­மா­யணம்” ஸத்யம் ஸத்யம் புருஷ சத்ய முத்­ருத்ய புஜ­மு­சய்தே! வேத சாஸ்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேச­வாத்­பரம் (வியா­சர்—­ஹ­ரி–­சேஷ 2.15, எமது இந்து மதத்தில் வேத­சாஸ்­தி­ரத்­திற்கு மேல் பிர­மாணம் கிடை­யாது. கேச­வனை விட மேலான தெய்­வ­மில்லை. ஸத்யம் ஸத்யம் ஸத்யம் என்று வேத­வி­யாசர் தமது கையைத் தூக்­கிக்­கொண்டு ஸத்­யப்­பி­ர­மாணம் செய்தார். இதையே “சுடர்­மிகு சுருதி” என்று நம்­மாழ்வார் அருளிச் செய்தார். வேதாந்­தத்தைப் புரிய வைப்­பதில் இதி­காச சிரேஷ்­ட­மான இரா­மா­யணம் குன்றின் மேலிட்ட அணையா விளக்கு. சுடர்­ஜோதி வேதமே ஸ்ரீ வைஷ்­ணவம். ஸ்ரீ  வைஷ்­ண­வமே இரா­மா­யணம் என்­பது தொடரும். புதன், சுக்­கிரன்  கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்:  9

பொருந்தா எண்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: கலப்பு வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)