22.08.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 06 ஆம் நாள் புதன்­கி­ழமை.

Published on 2018-08-22 11:33:15

சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி திதி பகல் 10.21 வரை. அதன் மேல் துவா­தசி திதி. பூராடம் நட்­சத்­திரம். நாள் முழு­வதும் நட்­சத்­திர திரி­தினஸ் பிருக்கு. சிரார்த்த திதி வளர்­பிறை. துவா­தசி அமிர்­த­யோகம் கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மிரு­க­சீ­ரிஷம். சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளி­கை­காலம் 10.30– 12.00, வார­சூலம்– வடக்கு (பரி­காரம் –பால்) ஸர்வ ஏகா­தசி விரதம். வாஸ்து நாள்.

மேடம் : தெளிவு, அமைதி

இடபம் : திறமை, முன்­னேற்றம்

மிதுனம்         : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : சினம், பகை

சிம்மம் : முயற்சி, முன்­னேற்றம்

கன்னி : பரிவு, பாசம்

துலாம் : புகழ், பாராட்டு

விருச்­சிகம் : சிக்கல், சங்­கடம்

தனுசு : வாழ்வு, வளம்

மகரம் : பொறுமை, அமைதி

கும்பம் : அசதி, வருத்தம்

மீனம் : புகழ், பெருமை

“பூ சூக்தம்” எம் பெருமான் ஸ்ரீமன் நாரா­ய­ணனின் அவ­தார விசே­டங்கள் எல்லாம் பூமி பிராட்­டி­யா­ரி­ட­முள்ள பிரே­மத்தை வெளி­யி­டு­வதை கம்ப நாட்­டாழ்வார் “அர­வாகிச் சுமத்­தியால் அணி­யெற்றின் ஏந்­து­தியால், ஒரு வாயின் விழுங்­கு­தியால், ஓர­டியால்     ஒளித்­தியாய், திரு­வான நில­ம­களை” (ஆரண்ய காண்டம் விராதன் வதை) பரம் பொருளின் நாய­கியே இப்­பூ­மித்தாய் என்­பதை சொல்­லவும் வேண்­டுமோ? சொல்­லா­மலே விளக்­கு­மல்­லவா?”

பூசூக்தம் முற்­றிற்று. நாளை ஸ்ரீ வைஷ்­ண­வத்தில் ஸ்ரீமத் இரா­மா­யணம் தொடரும்.

(உங்கள் கட்­டிலின் விரிப்பில் இதனை எழுதி வையுங்கள் –"காலை­யி­லேயே எழுந்­தி­ரா­விட்டால் முன்­னேற மாட்டாய்")

ராகு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. 

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5 

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)