"ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21-08-2018)..!

Published on 2018-08-21 11:03:57

21.08.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 5 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச தசமி திதி காலை 8.44 வரை. அதன்மேல் ஏகா­தசி திதி. மூலம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 3.59 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி: வளர்­பிறை ஏகா­தசி. அமிர்­த­சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: ரோகிணி, சுப­நே­ரங்கள்: காலை 7.45– 8.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்) குங்­கி­லியக் கலய நாயனார் குரு­பூஜை. மழை பெய்ய வாய்ப்­புண்டு.

மேடம் : முயற்சி, முன்­னேற்றம்

இடபம் : அமைதி, சாந்தம்

மிதுனம் : புகழ், பெருமை

கடகம் : உயர்வு, மேன்மை

சிம்மம் : நிறைவு, பூர்த்தி

கன்னி : யோகம், அதிர்ஷ்டம் 

துலாம் : உதவி, நட்பு

விருச்­சிகம் : உழைப்பு, உயர்வு

தனுசு : இலாபம், லக் ஷ்மீகரம்

மகரம் : தனம், சம்­பத்து

கும்பம் : சினம், பகை

மீனம் : இன்பம், மகிழ்ச்சி

‘பூசூக்தம் மந்­திரம்’ தமி­ழாக்கம் பிர­மத்­துக்கு இருப்­பி­டமாய் உள்­ள­வளே எல்லா பிரா­ணி­க­ளுக்கும் வாசஸ்­த­லமாய் இருக்­கின்­ற­வளே! பொன்னை கர்ப்­பத்தில் உடை­ய­வளே! சமுத்­தி­ரத்தை சேலை­யா­கவும் சூரி­யனை தில­க­மா­கவும் வரம் என்­கின்ற நிதியை உடை­ய­வளாய் ஸ்ரீமன் நாரா­ய­ண­னுக்குப் பத்­தி­னி­யான பூமி­தே­வியே! என்னை அனுக்­கி­ரகம் செய்ய வேண்டும். (பூ சூக்தம் தொடரும்)

குரு, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)