"நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோஅதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். ...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19-08-2018)..!

Published on 2018-08-19 10:45:23

19.08.2018 விளம்பி வருடம் ஆவணி மாதம் 03 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

சுக்­கில பட்ச அஷ்­டமி திதி காலை 6.41 வரை. பின்னர் நவமி திதி. அனுஷம் நட்­சத்­திரம். பின்­னி­ரவு 12.08 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை நவமி. மர­ண­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பரணி, கார்த்­திகை. சுப­நே­ரங்கள்: காலை 6.15 – 7.15, மாலை 3.15 – 4.15, ராகு காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம்– வெல்லம்)  குலச்­சி­றையார் நாயனார்  குரு­பூஜை

மேடம் :இலாபம், லக் ஷ்­மீ­கரம்

இடபம் : நலம், ஆரோக்­கியம்

மிதுனம் : சுகம், இன்பம்

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்  

கன்னி : போட்டி, ஜெயம்

துலாம் : அசதி, வருத்தம்

விருச்­சிகம் : புகழ், பாராட்டு

தனுசு : பொறுமை, அமைதி

மகரம் : நற்­செயல், பாராட்டு

கும்பம் : புகழ், செல்­வாக்கு

மீனம் : நன்மை, யோகம்

“பூ சூக்தம்” மந்­திரம் 4. தமிழில் மொழி­பெ­யர்ப்பு: பர­ம­பு­ரு­ஷனின் தேஜஸ்­பி­ராண அபான  என்னும்  செயல்­களைச் செய்து கொண்டு உள்ளே சஞ்­ச­ரிக்­கின்­றது. பெரி­துமாய்  அழ­கா­யுமாய்  பிர­கா­சிக்­கின்­றது.  (தொடரும்) இன்று  தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் அபி­ஷேகம் தீபா­ரா­தனை சகஸ்ரநாம அர்ச்­சனை அன்­ன­தானம் வழங்­கப்­படும்.

சூரியன், சந்­திரன்  கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள் :1, 5, 7

பொருந்தா எண்கள்: ஏனையவை

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம். 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)