"ஒவ்வொரு மனிதனும் அவனுடைய குணங்களில் குறைகளுடையவனே...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (16-08-2018)..!

Published on 2018-08-16 10:42:29

16.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 31 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி காலை 7.20 வரை. அதன் மேல் சஷ்டி திதி. சித்­திரை நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.42 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சஷ்டி சித்­தா­மிர்த யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம் நட்­சத்­தி­ரங்கள் உத்­தி­ரட்­டாதி, ரேவதி. சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, பிற்­பகல் 12.15– 1.15, ராகு காலம் 1.30– 3.00, எம­கண்­டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம் தெற்கு (பரி­காரம் –தைலம்) சுக்­கில பட்ச சஷ்டி விரதம். ஆடி அறுதி.

மேடம் : அமைதி, தெளிவு

இடபம் : பொறுமை, நிதானம்

மிதுனம் : பகை, விரோதம்

கடகம் : தொல்லை, சங்­கடம்

சிம்மம் : துன்பம், கவலை

கன்னி : நஷ்டம், கவலை

துலாம் : விவேகம், வெற்றி

விருச்­சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு : புகழ், பெருமை

மகரம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

கும்பம் : வரவு, லாபம்

மீனம் : நட்பு, உதவி

பூசூக்தம் தமி­ழாக்கம் மந்­திரம் 1. பூமி தேவியே! பரப்­பினால் பூமி­யா­கவும் மேன்­மை­யினால் தேவ­லோ­க­மா­கவும், பெரு­மை­யினால் அந்­த­ரிஷ லோக­மா­கவும் நீ விளங்­கு­கின்றாய். பரி­பூ­ர­ணமாய் இருப்­ப­வளே! உனக்கு சமீ­பத்தில் பர­மாத்­மா­வா­கிய விஷ்­ணுவை அனு­ப­விக்­கத்­தக்க ஜீவாத்­மாவை அனு­ப­விக்கச் செய்­வதன் பொருட்டு என் ஆத்­மாவை உனக்கு ஸமர்ப்­பிக்­கின்றேன்.

கேது, சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளிர் நீலம், வெளிர் மஞ்சள். 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)