11.03.2016 மன்மத வருடம் மாசி மாதம் 28 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

2016-03-11 08:11:38

சுக்கிலபட்ச திரிதியை திதி பின்னிரவு 1.27 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி ரேவதி நட்சத்திரம் முன்னிரவு 7.24 வரை. பின்னர் அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி. வளர்பிறை. திரிதியை. அமிர்தயோகம். சுபமுகூர்த்தம் சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூரம், உத்திரம். சுபநேரங்கள் பகல் 10.00 – 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 10.30 – 12.00, எமகண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வாரசூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்.)

மேடம்: ஜெயம், புகழ்

இடபம்: நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் : உற்சாகம், வரவேற்பு

கடகம்: அமைதி, தெளிவு

சிம்மம்: நிறைவு, பூர்த்தி

கன்னி: இன்பம், மகிழ்ச்சி

துலாம்: அன்பு, இரக்கம்

விருச்சிகம்: லாபம், லக்ஷ்மீகரம்

தனுசு: செலவு, நஷ்டம்

மகரம்: நஷ்டம், கவலை

கும்பம்: போட்டி, ஜெயம்

மீனம்: உயர்வு, மேன்மை

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய “திருமாலை” பாசுரம் 41 வானுளார் அறியலாகா வானவா என்பராகில் தேனுலாம் துளபமாலைச் சென்னியாய் என்பராகில். பொருளுரை: தரக் குறைவான செயலைச் செய்பவர்களும் மற்றவரைக் கொண்டு அச்செயல்களை நடத்திக் கொள்ளுபவர்களும் பிரம்மா முதலிய தேவர்களாலும் முழுவதுமாய் அறிய முடியாத ஸ்ரீ வைகுண்டத்தில் நித்ய வாசம் செய்பவனே! தேன் சிந்தும் துளசி மாலையை அணிந்தவனே என்று தோத்திரம் செய்தால் அவர்கள் போஜனம் செய்ய மிச்சத்தை உண்டவர்களும் பரிசுத்த மாவர். 

(ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“சிந்தித்து விட்டு செயல்படாமல் இருப்பது உழுதுவிட்டு விதைக்காமல் இருப்பதற்கு சமம்”)

சந்திரன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 9, 8, 6

அதிர்ஷ்ட வர்ணம்: பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right