"விவேகத்தையும் தன் விருப்பதிற்கேற்ப இணங்க வைப்பதுதான்பாசம்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15-08-2018)..!

Published on 2018-08-15 09:38:26

15.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 30 ஆம் நாள் புதன்­கி­ழமை

சுக்­கில பட்ச சதுர்த்தி திதி காலை 8.30 வரை. அதன் மேல் பஞ்­சமி திதி. அஸ்தம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.52 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை பஞ்­சமி. மர­ண­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரட்­டாதி, உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 11.15– 12.00, மாலை 4.45– 5.45, ராகு காலம் 12.00– 1.3-0, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம் வடக்கு (பரி­காரம்– பால்) இன்று கரு­ட­பஞ்­சமி, நாக­பஞ்­சமி.  

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : அன்பு, பாசம்

மிதுனம் : பணம், பரிசு

கடகம் : தொல்லை, சங்­கடம்

சிம்மம் : நட்பு, உதவி

கன்னி : பாராட்டு, நற்­செயல்

துலாம் : பேராசை, நஷ்டம்

விருச்­சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு : கோபம், அவ­மானம்

மகரம் : சினம், பகை

கும்பம் : வரவு, லாபம்

மீனம் : சுபம், மங்­களம்

“பூ சூக்தம்” திரு­மாலின் இடப்­பு­ற­மாக எழுந்­த­ருளி பூமி தேவி என்னும் திரு நாமத்­துடன் அருள் பாலிப்­பவள் “பெரு­மை­யு­டை­யவள் பூமகள். பொறு­மை­யு­டை­யவள் பூதேவி. குண­மு­டை­யவள் ஸ்ரீ தேவி. மன­மு­டை­யவள் மண்­ம­டந்தை. கோஷிப்­பவள் ஸ்ரீதேவி, போஷிப்­பவள் பூமி தேவி, அழ­கு­டையாள் இலக்­குமி, புக­ழு­டையாள் பூமி தேவி. ஆதாரம் அலர் மேல் மங்கை ஆதாரம் அவ­னியாள்?” பூமியில் பிறந்து வளர்ந்த நாம் பூதே­வியின்  பெரு­மையை போற்ற வேண்­டாமா? அதற்­கு­வேத புருஷன் ஸ்ரீமன் நாரா­யணன் உத­வு­கிறான். பூ சூக்த மந்­தி­ரங்­களின் தமி­ழாக்கம் நாளை முதல் தொடரும்.

சுக்­கிரன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 2

பொருந்தா எண்க்ள: 3, 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர்பச்சை, வெளிர் நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)