"இறைவன் நெடுங்காலம் காத்திருக்கிறார் ஆனால் இறுதியில் தண்டிக்கிறார்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14-08-2018)..!

2018-08-14 09:21:20

14.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 29 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச திரி­தியை திதி பகல் 10.05 வரை. அதன் மேல் சதுர்த்­தி­ திதி. உத்­திரம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.27 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி: வளர்­பிறை சதுர்த்தி. அமிர்த சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்) தூர்வா கண­பதி விரதம். நாக­ச­துர்த்தி விரதம். சுக்­கி­ல­பட்ச சதுர்த்தி விரதம்.

மேடம் : ஜெயம், புகழ்

இடபம் : நட்பு, உதவி

மிதுனம் : புகழ், பெருமை

கடகம் : ஓய்வு, அசதி

சிம்மம் : அன்பு, ஆத­ரவு

கன்னி : பாசம், அன்பு

துலாம் : முயற்சி, முன்­னேற்றம்

விருச்­சிகம் : விவேகம், வெற்றி

தனுசு : ஏமாற்றம், கவலை

மகரம் : பொறுமை, அமைதி

கும்பம் : ஆக்கம், நிறைவு

மீனம் : புகழ், பெருமை

ஸ்ரீசூக்தம், ஸ்ரீமகா­லஷ்மி அழகு தெய்வம், அன்பின் இருப்­பிடம், கருணைக் கடல், காருண்ய தேவதை, பொறு­மையின் இலக்­கணம், அமை­தியின் வடிவம், அடக்­கத்தின் உருவம். சாந்­தஸ்­வ­ரூ­பிணி, சாத்­வீக குண­வதி, ஜகந்­மாதா, சேத­னர்­களை இரட்­சிப்­ப­தற்­காகப் பெரு­மா­ளை­விட்டு கண­நே­ரமும் “அகல கில்லேன்” என்று அவ­ரு­டைய வத்ஸத் தலதில் பெரிய பிராட்டி இவள். பக்­தர்­களின் தவறைப் பொருட்­ப­டுத்­தாமல் அவர்கள் கைங்­க­ரி­யத்தை ஒன்­றுக்குப் பத்­தாகக் கூட்டி பெரு­மா­னிடம் கூறி பெருமாள் அவர்­களை இரட்­சிக்கும் பேறு பார்த்து சந்­தோஷப்­படும் பெரிய பிராட்­டி­யரே! ஜகன் மாதா­வான ஸ்ரீ மகா­லக் ஷ்மி எங்கள் தாயே! சரணம். நாளை பூசூக்த மந்­தி­ரத்தின் சுருக்கம். பூமி­தே­வியின் பெருமை.

புதன், சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 9, 5

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, நீலம், சிவப்பு

இராமரத்தினம்ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right