"சட்டம் ஈக்களை பிடிக்கிறது குளவிகளை பறந்து போகவிடுகிறது..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13-08-2018)..!

Published on 2018-08-13 10:12:59

13.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 28 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச துவி­தியை திதி பகல் 11.58 வரை. பின்னர் திரு­தியை திதி. பூரம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.24 வரை. பின்னர் உத்­திரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி: வளர்­பிறை திரி­தியை. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அவிட்டம், சதயம். சுப­நே­ரங்கள்: காலை 6.15 – 7.15, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 7.30 – 9.00, குளிகை காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 10.30 – 12.00, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்) திரு­வா­டிப்­பூரம். ஸ்ரீஆண்டாள் திரு­நட்­சத்­திரம். ஸ்ரீவில்­லி­புத்தூர், ஸ்ரீஆண்டாள் பெருந்­தேரில் புறப்­பாடு. ஸ்வர்ண கௌரி விரதம்.

  மேடம் : ஆதாயம், இலாபம்

இடபம் : நிறைவு, ஆக்கம் 

மிதுனம் : அமைதி, தெளிவு

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் : நன்மை, யோகம்

கன்னி : வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : சினம், பகை

தனுசு : தொல்லை, சங்­கடம்

மகரம் : அமைதி, சாந்தம்

கும்பம் : உயர்வு மேன்மை

மீனம் : ஊக்கம், உயர்வு

புருஷ சூக்தம் “அஜா­ய­மாநோ பஹுதா விஜா­யதே” இறைவன் பிறப்­பற்­றவன். ஆனாலும் பிறக்­கின்றான். பிறப்­பற்­றவன் எவ்­வாறு பிறக்க முடியும்? கர்­மாக்கள் கழுத்தைப் பிடித்துத் தள்ள நாம் பிறக்­கின்றோம். ஆனால் இறை­வனோ ஆசைப்­பட்டு பல அவ­தா­ரங்­களை எடுக்­கின்றான் என்­பது புருஷ சூக்த மந்­தி­ரங்­களில் உறு­தி­யா­கி­விட்­டது. “ஹ்ரீச்­சதே லஷ்­மிச்ச பத்ந்­யெள இஷ்­டம்ம நிஷாண சுமும்ம நிஷாண ஸர்வ மநி­ஷாண” (உனக்கு ஸ்ரீதேவி, பூமி தேவிகள் பத்­தினி ஆவார்கள். இஷ்­டத்தை கொடும். எல்லா கைங்­க­ரி­யங்­க­ளையும் கொடும். சகல ரட்­ச­க­னா­கவும் பலப் பிர­தா­ன­னா­கவும் உள்ளாய். லஷ்­மி­நா­த­னான நீயே பர­ம­பு­ருஷன். ஒருவன் என்று புரு­ஷ­சூக்த மந்­திரம் நிர்­ண­யித்­துள்­ளது.

ராகு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று. அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், வெளிர் நீலம்                  இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)