"தவறுகளை மற்றவர்கள் மிகைப்படுத்துவதற்கு முன்பாக ஒத்துக்கொள்..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12-08-2018)..!

2018-08-12 09:26:32

12.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 27 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச பிர­தமை திதி பகல் 2.04 வரை. அதன் மேல் துவி­தியை திதி. மகம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 12.38 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். திதித்­வயம் சிரார்த்த திதிகள். வளர்­பிறை, பிர­தமை. துவி­தியை மர­ண­யோகம் கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: திரு­வோணம், அவிட்டம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 3.15– 4.15, ராகு­காலம் 4.30– 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார­சூலம் –மேற்கு (பரி­காரம்– வெல்லம்) நாளை திரு­வா­டிப்­பூரம். ஸ்ரீஆண்டாள் திரு­நட்­சத்­திரம். சந்­திர தரி­சனம். தெஹி­வளை விஷ்ணு ஆல­யத்தில் பகல் அபி­ஷேகம் அன்­ன­தானம்.

மேடம் : நற்­செயல், பாராட்டு

இடபம் : சுகம், ஆரோக்­கியம்

மிதுனம் : பக்தி, ஆசி

கடகம் : புகழ், பெருமை

சிம்மம் : உழைப்பு, உயர்வு

கன்னி : அன்பு, இரக்கம்

துலாம் : பொறுமை, அமைதி

விருச்­சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு : உயர்வு, மேன்மை

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : நலம், ஆரோக்­கியம்

மீனம் : தொல்லை, சங்­கடம்

புருஷ சூக்­தத்தில் நான்காம் மந்­திரம் பரம பதத்தில் நித்ய சூரி­க­ளுக்கு நிர்­வா­னாக இருக்கும் இருப்பை மதி­யாமல் தன் ரக் ஷணம் நிலை பெறு­வ­தற்­காக இவ்­வு­லகில் பிறந்து பல அவ­தா­ரங்­களை எடுத்தான் என்­பதை (த்ரி பாதூர்த்­தவ உதைத் புருஷ) (ஊர்த்வ புருஷ உயர இருக்கும் பரம பதத்­தி­லி­ருந்து தன்னை தா-ழ­விட்டான். அவ­தா­ரங்கள் எடுத்தான் என்­பதை த்ரிபாத் உதைத் என்­கி­றது. புருஷ சூக்த  நாலாம்  மந்திரம்) தொடரும்.குரு, ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right