"பலனை எதிர்பாராமல் எதை செய்யமுடியுமோ அதை செய்ய ஒரு போதும் நாட்களை தள்ளி போடாதீர்கள்..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09-08-2018)..!

Published on 2018-08-09 10:47:16

09.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 24 ஆம் நாள் வியாழக்கிழமை.

சுக்­கி­ல­பட்ச தசமி திதி காலை 6.24 வரை. கிருஷ்ணபட்ச திரயோதசி திதி முன்னிரவு 9.13 வரை. அதன்மேல் சதுர்த்தசி திதி. திருவாதிரை நட்சத்திரம் காலை 6.55 வரை. அதன்மேல் புனர்பூசம் நட்சத்திரம் பின்னிரவு 5.18 வரை. பின்னர் பூசம்  நட்சத்திரம் அவமாகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் மூலம்.  சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, ராகுகாலம் 1.30– 3.00, எமகண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வாரசூலம் –தெற்கு (பரிகாரம் –தைலம்) மாத சிவராத்திரி கிருஷ்ண பட்ச  மஹா பிரதோசம்.  

மேடம் : நன்மை, யோகம்

இடபம் : போட்டி, ஜெயம் 

மிதுனம் : நிறைவு, பூர்த்தி

கடகம் : நஷ்டம், கவலை

சிம்மம் : புகழ், பாராட்டு

கன்னி : மகிழ்ச்சி, சந்தோசம்

துலாம் : ஊக்கம், உயர்வு

விருச்சிகம் : புகழ், பெருமை

தனுசு : காரியசித்தி, அனுகூலம்

மகரம் : நட்பு, உதவி

கும்பம் : அன்பு, பாசம்

மீனம் : தெளிவு, அமைதி

“புருஷ சூக்தம்” சேதனன்  பர­ம­புரு ஷனான  மஹா­விஷ்­ணுவை  அடைய  ஆசைப்­பட்டு ஒரு  படி ஏறி­னாலும்  சேத­னனை அடைய  பகவான் பத்­துப்­படி  கீழே  இறங்கி  வரு­கிறான். இதை புருஷ சுக்த  மந்­தி­ரத்தில்  “அத்ய  திஷ்டத் தஸாஸ்­குலம்” பத்து மடங்கு  அதி­க­மாக  வியா­பித்­துள்ளான் என்று  கூறப்­பட்­டுள்­ளது. நாளை புரு­ஷ­சூக்­தத்தில்  இரண்­டா­வது மந்­திரம். (தொடரும்) செவ்வாய், சூரியன்  ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்: 5

பொருந்தா எண்கள்: 8, 2, 

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், சிகப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)