"அதிர்ஷ்டம் உள்ளவனுக்கு சேவலும் முட்டையிடும்....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07-08-2018)..!

Published on 2018-08-07 09:56:09

07.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 22 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச ஏகா­தசி திதி பின்­னி­ரவு 1.52 வரை. பின்னர் துவா­தசி திதி. ரோகிணி நட்­சத்­திரம். காலை 9.45 வரை. பின்னர் மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்பிறை ஏகா­தசி. அமிர்த சித்­த­யோகம். மேல் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம், அனுஷம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 5.00– 6.00, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) கிருஷ்ண பட்ச ஸர்வ யோகினி ஏகா­தசி. ஆடிச் செவ்வாய். மேடம் :  தனம், சம்­பத்து

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம் : புகழ், பெருமை

கடகம் : நிறைவு, சம்­பத்து

சிம்மம் : செலவு, விரயம்

கன்னி : பகை, விரோதம் 

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : லாபம், ஆதாயம்

தனுசு : மகிழ்ச்சி, சந்­தோசம்

மகரம் : அமைதி, தெளிவு

கும்பம் : லாபம், லக் ஷ்மீகரம்

மீனம் :  உயர்வு, மேன்மை

விஸ்ணு சூக்­தங்­களில் தேறி­யவை " இவ­னது இரண்­டடி வைப்­பு­களை சேத­ன­ரெல்லாம் அறிந்து பூஜிக்­கின்­றனர். இவ­னது மூன்­றா­வது அடி­வைப்பை அவனே அறியான். உபய விபூதி நாத­னான அவன் பெரு­மையின் மேலெல்­லையை முக்­கா­லத்தில் எவனும் அறிந்­த­த­தில்லை. ரிஷப சிப்ரன் என்னும் அசு­ரனின் மாயையை அழித்து, சூரியன், சுவர்க்கம் முத­லா­ன­வற்றை உண்­டாக்­கி­யவன் விஸ்­ணுவே. சம்­பா­சு­ர­னு­டைய தொண்ணூற்­றொன்­பது புரங்­க­ளையும் அழித்து, அவ­னு­டைய நூறா­யிரம் போர் வீரர்­க­ளையும் ஒழித்­தவன் விஸ்­ணுவே. நாளை புருஷ சூக்தம். தொடரும்.

கேது, சனி ஆதிக்கம் கொண்ட இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5

பொருந்தா எண்கள் : 7, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளிர் நீலம், வெளிர் மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)