"சுத்தம் என்பது உடுத்தும் உடையில் மட்டுமல்ல உள்ளத்திலும் வேண்டும்....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (05-08-2018)..!

Published on 2018-08-05 10:30:41

05.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி காலை 7.07 வரை. அதன் மேல் நவமி திதி பின்னிரவு 5.43 வரை.  பின்னர் நவமி திதி(திதி அவமாகம்)பரணி நட்சத்திரம் பகல் 11.33 வரை. பின்னர் கார்த்திகை நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை நவமி. சித்தயோகம். கரிநாள். சுபம் விலக்குக. கீழ் நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: சுவாதி, விசாகம் சுபநேரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 3.15–4.15 ராகுகாலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வாரசூலம் – மேற்கு (பரிகாரம் – வெல்லம்) ஆடி  கிருத்திகை மூர்த்தியார், புகழ்ச் சோழர் நாயனார் குருபூஜை.

மேடம் : களிப்பு, மகிழ்ச்சி

இடபம் : இன்பம், சந்தோஷம்

மிதுனம் : வெற்றி, மகிழ்ச்சி

கடகம் : நலம், ஆரோக்கியம்

சிம்மம் : கவலை, கஷ்டம்

கன்னி : வரவு, லாபம்

துலாம் : பகை, பயம்

விருச்சிகம் : சிக்கல், சங்கடம்

தனுசு : புகழ், பெருமை

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் : தடை, இடையூறு

மீனம் : பணம், பரிசு

விஷ்ணு சூக்தஸ்களில் தேறியவை “உலகங்களை எல்லாம் அளந்தவன் விஷ்ணு. இவனுடைய  மூன்று அடிகளில் எல்லா உலகங்களும்   மறைக்கப்பட்டது. விஷ்ணுவே  ஸர்வ ரட்சகனாஷ எவரா லும் ஜெயிக்க முடியாதவனாகவும்  தர்ம ஸ்ம்ஸ்தாபனார்த்தமாக அவதரிப்பவனா கவும் உள்ளான்.  விஷ்ணுவின் சேஷ்டித் தங்கள் தர்மத்தை நிலை நிறுத்துவ தற்காகவே ஏற்பட்டவை. விஷ்ணுவின்  ஸ்தானமே பரமபதம், நித்ய விபூதி எனப்படும். அங்கே நித்யசூரிகள் எப் போதும் அவனைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்”

 புதன், சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்: 9

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:பச்சை, நீலம், சிகப்பு, கலப்பு வர்ணங்கள்