10.03.2016 மன்மத வருடம் மாசி மாதம் 27 ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2016-03-10 16:09:06

சுக்கிலபட்ச துவிதியை திதி பின்னிரவு 3.50 வரை. அதன் மேல் திரிதியை திதி உத்திரட்டாதி நட்சத்திரம் முன்னிரவு 9.02 வரை. அதன் மேல் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை. துவிதியை. சித்தியோகம். சுபநாள். சந்திர தரிசனம். சுபநேரங்கள் காலை 10.30 – 11.30, பிற்பகல் 12.30– 1.30. ராகு காலம் 1.30 – 3.00, குளிகை காலம் 9.00 – 10.30. எமகண்டம் 6.00 – 7.30, வாரசூலம் தெற்கு (பரிகாரம் தைலம்)

மேடம்: மகிழ்ச்சி, சந்தோசம் 

இடபம்: லாபம், லஷ்மீகரம்

மிதுனம்: யோகம், அதிர்ஷ்டம்

கடகம்: இன்பம், மகிழ்ச்சி

சிம்மம்: ரோகம், அவஸ்தை

கன்னி: ஜெயம், புகழ்

துலாம்: நன்மை, அதிர்ஷ்டம்

விருச்சிகம்: செலவு நஷ்டம்

தனுசு: பகை, விரோதம்

மகரம்: கீர்த்தி, புகழ்

கும்பம்: தெளிவு, அமைதி

மீனம்: அமைதி, நிம்மதி

தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய “திருமாலை” பாசுரம் 40 திருமறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து மருவிய மனத்தராகில் மாநிலத்து உயிர்கள் எல்லாம் வெருவரக்கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினைய????? அருவினைப் பயனதுய்யார் அரங்க மாநகருளானே! பொருளுரை: திருமகளையும் ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவையும் திருமார்பில் தரித்திருக்கும் ஸ்ரீரங்கநாதா! உன்னை எப்பொழுதும் தியானித்து நீயே கதி என்று நம்புகிறவர்கள், பூமியில் உள்ள உயிர்களை நடுங்கும்படி கொலை செய்து தீயினால் கொழுத்தி, சம்பாதித்த பாவத்தை உடையவரே ஆனாலும் அந்த பாவங்களின் பலனை அவர்கள் அனுபவிக்கவிடாமல் காக்கின்றாய். 

(ஆழ்வார் திருவடிகளே சரணம்)

(“பணம் பேசவும் செய்யும் பேசுவோரை அடக்கவும் செய்யும்”)

சூரியன், ராகு கிரகங்களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5.

பொருந்தா எண்: 8.

அதிர்ஷ்ட வர்ணம்: மஞ்சள், வெளிர் நீலம்.

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)