"எல்லாவற்றிற்கும் காலம் மாற்று வழியை வைத்திருக்கிறது...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (01-08-2018)..!

Published on 2018-08-01 09:26:29

01.08.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 16 ஆம் நாள் புதன்கிழமை.

கிருஷ்ணபட்ச சதுர்த்தி திதி காலை 8.21 வரை. அதன் மேல் பஞ்சமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 10.10 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை பஞ்சமி. அமிர்த சித்தயோகம். கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் பூரம். சுபநேரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகுகாலம் 12.00– 1.30, எமகண்டம் 7.30– 9.00, குளிகைகாலம் 10.30– 12.00 (வாரசூலம்– வடக்கு) (பரிகாரம் –பால்). 

மேடம் : அன்பு, பாசம்

இடபம் : அமைதி, தெளிவு

மிதுனம் : ஆக்கம், நிறைவு

கடகம் : காரியசித்தி, அனுகூலம்

சிம்மம் : பிரயாணம், செலவு

கன்னி : வெற்றி, யோகம்

துலாம் : உற்சாகம், வரவேற்பு 

விருச்சிகம் : கவலை, கஷ்டம்

தனுசு : புகழ், பெருமை

மகரம் : அமைதி, நிம்மதி

கும்பம் : சுகம், ஆரோக்கியம்

மீனம் : இன்பம், மகிழ்ச்சி

“ஸுபாலோ” உப நிஷத்தின் நிச்சி தார்த்தம் “நைவே­ற­கிஞ்­சன அக்ர ஆஸீத் அமூலம் அநா­தாரா இமா; ப்ரஜா ப்ரஜா­யந்தே திவ்யோ தேவ ஏதோ நாரா­யண” பொருள்– முதலில் இங்கு உலகம் தோன்­றி­ய­வுடன் ஒன்­று­மில்லை. ஸ்ரீ வைகுண்டம் என்னும் பரம பதத்­தி­லி­ருக்கும் ஸ்ரீமன் நாரா­ய­ண­னி­ட­மி­ருந்து எல்லாம் உண்­டா­கின்­றன. அவனைத் தவிர இவை­க­ளுக்கு வேறு ஆதாரம், காரணம் கிடை­யாது.

சூரியன், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இலேசான நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)