"பணத்தை விட நாம் நேசிக்க உலகில் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (31-07-2018)..!

Published on 2018-07-31 08:49:44

31.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 15ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

கிருஷ்ணபட்ச திரிதியை திதி காலை 7.26 வரை அதன் மேல் சதுர்த்திதிதி. சதயம் நட்சத்திரம் காலை 8.37 வரை. பின்னர் பூரட்டாதி நட்சத்திரம்.சிரார்த்த திதி தேய்பிறை சதுர்த்தி. மரணயோகம் மேல் நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம்  மகம். சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45 மாலை 5.00 – 6.00. ராகுகாலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00 – 10.30, குளிகை  காலம் 12.00 – 1.30 (வாரசூலம்– வடக்கு). (பரிகாரம்– பால்). சங்கட ஹர சதுர்த்தி விரதம். ஆடிச்செவ்வாய் அம்பிகை வழிபாடு நன்று.  

மேடம் :  நற்செயல், பாராட்டு

இடபம் : ஊக்கம், உயர்வு

மிதுனம் : செலவு, விரயம்

கடகம் : அமைதி, நிம்மதி

சிம்மம் : பிரயாணம், அலைச்சல்

கன்னி :  கவலை, துன்பம்

துலாம் : அன்பு, பாசம்

விருச்சிகம் : உதவி, நட்பு

தனுசு :  அன்பு, ஆதரவு

மகரம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கும்பம் : உயர்வு, மேன்மை

மீனம் : நலம், ஆரோக்கியம்

சாந்தோக்ய உபநிஷத்தில் ஸ்ரீ மகா விஷ்ணு வர்ணனை ‘தஸ்ய யதா கப்யா ஸம் புண்டரீகமேவ மக் ஷினீ’’. ‘பொருள்: ஆழ்ந்த நீரிலே உண்டானதாய் பருத்த தண்டையுடையதாய் சூரிய கிரகணங் களாலே மலர்த்தப்பட்டதான தாமரை இதழைப் போலே நிர்மலமாகவும் நீண்டி ருக்கும் திருக்கண்களையும் உடைய வனே! பரம புருஷனான ஸ்ரீமத் நாராய ணன். (தொடரும்)

 ராகுவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று. (பிறப்பு எண் 4, விதி எண் 4)

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பொருந்தா எண் :8

அதிர்ஷ்ட வர்ணங்கள் –மஞ்சள், வெளீர்நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)