"ஒருவன் கீழே விழுந்தால் இந்த மொத்த உலகமும் அவன் மீது ஓடும்..!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (26-07-2018)..!

2018-07-26 10:39:53

26.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 10 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

வளர்­பிறை சதுர்த்­தசி திதி பின்­னி­ரவு12.29 வரை. பின்னர் பௌர்­ணமி திதி, பூராடம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.12 வரை. பின்னர் உத்­தி­ராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்­தசி சித்­த­யோகம். கரிநாள். சுபம் விலக்­குக. கீழ்­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள். ரோகிணி, மிரு­க­சீ­ரிடம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, ராகு­காலம் 1.30– 3.00 எமண்டம் 6.00– 7.30, குளி­கை­காலம் 9.00– 10.30, வார­சூலம்– தெற்கு (பரி­காரம்– தைலம்) பவித்­திர சதுர்த்தசி. 

மேடம் : தெளிவு, அமைதி

இடபம் : சிக்கல், சங்­கடம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : தொல்லை, சங்­கடம்

சிம்மம் : போட்டி, ஜெயம்

கன்னி : நலம், ஆரோக்­கியம்

துலாம் : விருத்தி, யோகம்

விருச்­சிகம் : அமைதி, சாந்தம்

தனுசு : முயற்சி, முன்­னேற்றம்

மகரம் : பொறுமை, நிதானம்

கும்பம் : நன்மை, யோகம்

மீனம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

திரு­ம­ழி­சை­யாழ்வார் பாசுரம் ‘இன்­றாக நாளை­யே­யாக இனிச்­சி­றிது நின்­றாக நின்­னருள் என் பாலதே– நன்­றாக நான் உன்­னை­யன்­றி­யிலேன் கண்டாய் நாரா­ய­ணனே, நீ என்­னை­யன்றி இல்லை. பொருள்: நாரா­யணா! மோட்­ச­மான ஸ்ரீ வைகுண்­டத்தை எனக்கு இன்று தருவாய் என்று எண்­ணு­கிறேன். இன்று முடி­யாமல் போனால் நாளை கொடுப்பாய். ஆனால் என்­றா­வது ஒருநாள் கொடுத்­தே­யாக வேண்டும். ஏனென்றால் நான் உன்­னை­யன்றி இல்லை. அதுபோல் நீயும் நான் இன்றி இல்லை. நாளை கடோப நிஷத்தில் ஸ்ரீ வைஷ்­ணவா. தொடரும்…..

சனியின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று, (பிறப்பு எண் 8, விதி எண் 8) 

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 8, 7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right