"நல்லொழுக்கம் பகைவரையும் வென்று விடும்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (23-07-2018)..!

Published on 2018-07-23 08:24:56

23.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 7 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கில பட்ச ஏகா­தசி திதி முன்­னி­ரவு 7.45 வரை. அதன் மேல் துவா­தசி திதி. அனுஷம் நட்­சத்­திரம் மாலை 4.40 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை. ஏகா­தசி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அஸ்­வினி, பரணி. சுப­நே­ரங்கள்: காலை 6.15– 7.15, 9.15 –10.15  மாலை 4.45– 5.45. ராகு­காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00,  குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம்– கிழக்கு (பரி­காரம்– தயிர்)

மேடம் : வெற்றி, அதிர்­ஷ்டம்

இடபம் : நலம், ஆரோக்­கியம்

மிதுனம் : சுகம், இன்பம் 

கடகம் : தனம், சம்­பத்து

சிம்மம் : கவனம், எச்­ச­ரிக்கை 

கன்னி : தேர்ச்சி, புகழ் 

துலாம் : இலாபம், ஆதாயம் 

விருச்­சிகம் : விருத்தி, மேன்மை 

தனுசு: : இலாபம், லக் ஷ்மீகரம் 

மகரம் : போட்டி, ஜெயம்

கும்பம் : உயர்வு, மேன்மை 

மீனம் : நற்­செயல், பாராட்டு 

இன்று சுக்­கில பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம். இதற்கு விஷ்ணு சயன ஏகா­தசி விரதம் என்று பெயர். இன்று உப­வாஸம் இருந்து எம்பெருமான் ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­படல் நன்று. தானே நர­னா­கவும், தானே நாரா­ய­ண­னா­கவும் எம் பெருமான் “திரு­மந்­தி­ரத்தை” பத்­தி­ரி­யிலும் மஹா­லக் ஷ்­மிக்கு திரு­மந்­தி­ரத்தை நித்ய விபூ­தி­யிலும் தேர்த்­தட்டில் அர்­ஜு­ன­னுக்கு சரம் சுபோ­கத்­தையும் அரு­ளிச்­செய்தார். 

புதனின் எண் ஐந்து. பூரண ஆதிக்க தின­மான இன்று,

அதிர்ஷ்ட எண்கள்: 9– 5

பொருந்தா எண்: கிடை­யாது. (எண் ஐந்­துக்கு மட்டும் உரித்­தா­னது)

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  நீலம், சாம்பல்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)