"சரியான சந்தர்ப்பத்தில் சொல்லவேண்டியதை தெளிவாக சொல்ல வேண்டும்....!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (20-07-2018)..!

Published on 2018-07-20 11:04:54

20.07.2018 விளம்பி வருடம் ஆடி மாதம் 4 ஆம் நாள் வெள்ளிக்கிழமை

வளர்பிறை அஷ்டமி திதி மாலை 6.52 வரை. அதன் மேல் நவமி திதி. சித்திரை நட்சத்திரம் பகல் 1.56 வரை பின்னர் சுவாதி நட்சத்திரம் சித்த யோகம். சம நோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் பூரட்டாதி உத்திரட்டாதி சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை  4.45–5.45, ராகு காலம் 10.30–12.00,  எம கண்டம் 3.00–4.30, குளிகை காலம் 7.30 – 9.00 வாரசூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்) 

மேடம் : நன்மை, யோகம்

இடபம் : பகை, விரோதம்

மிதுனம் : செலவு, விரயம்

கடகம் : வரவு, இலாபம்

சிம்மம் : இலாபம், லக் ஷ்மிகரம்

கன்னி :  அன்பு, பாசம்

துலாம் :  உயர்வு, மேன்மை

விருச்சிகம் :  நலம், ஆரோக்கியம்

தனுசு : காரியசித்தி, அனுகூலம்

மகரம் : சிக்கல், கஷ்டம்

கும்பம் : நோய், வருத்தம்

மீனம் : பகை, விரோதம்

இன்று துர்காஷ்டமி, பட்சிராஜன் (கருடாழ்வார்) ஜெயந்தி, கருட தரிசனம் நன்று. பெருமிழலைக் குறும்பர் நாயனார் குருபூஜை. "நேரத்தை தள்ளிப் போடாதீர்கள். தாமதங்கள் அபாயமான முடிவைக் கொண்டுள்ளன." சந்திரனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று (பிறப்பு எண் ௨ விதி எண் ௨) எடுத்த காரியங்களை தள்ளிப் போடாதீர்கள். சந்திரனைப் போன்று ௧௫ நாட்கள் வளர்பிறையும் ௧௫ நாட்கள் தேய்பிறையும் கொண்டது உங்கள் வாழ்க்கை. இறைவழிபாடு, ஒரு மகானின் வழிபாடும் உகந்தது.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6,7

பொருந்தா எண்: 9,8

அதிர்ஷ்ட வர்ணம்: இலேசான பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)